இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வருடன் தமிழிசை திடீர் சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக சி.வி விக்னேஷ்வரன் பொறுப்பேற்றார்.

tamilisai soundararajan meet northern province cm vigneshwaran

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் இன்று யாழ்ப்பாணம் வந்திருந்தார். அங்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மற்றும் அமைச்சர்களை சந்தித்தார். சிறிது நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

நேற்று தமிழிசையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழிசையின் இலங்கை பயணம் தனிப்பட்ட முறையிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu bjp state president tamilisai soundararajan today meet on sri lanka's Northern province CM Vigneshwaran
Please Wait while comments are loading...