இலங்கையின் நிலைமை கூடிய விரைவில் பாகிஸ்தானுக்கு வரும். . சாபம் விடும் இம்ரான் கான்!
இஸ்லாமாபாத்: இலங்கையில் அந்நாட்டுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடி வரும் நிலை, கூடிய விரைவில் பாகிஸ்தானிலும் ஏற்படும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராக பதவி வகித்தார். அப்போது அவருக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை அடுத்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஏற்க மறுக்கும் இம்ரான் கான்
புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக்கொண்டதை ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். இதேபோல் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான் கான் அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தற்போதும் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் பிரமாண்ட பேரணி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு எதிராக போராடுவர்
இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது போல, விரைவில் பாகிஸ்தான் நாட்டிலும் மக்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள் என தெரிவித்துள்ளார். இலங்கையில் வராலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு ராஜபக்சே சகதோரர்களின் நிர்வாக சீர்கேடே காரணம் என அந்நாட்டு மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே சகோதரர்கள் விலகி ஓடினர். தற்போது இதை மேற்கோள் காட்டி இம்ரான் கான் அடுத்தடுத்து 2 டுவிட்களை வெளியிட்டார்.

டுவிட்டர் பதிவு
முதல் பதிவில் அவர் கூறுகையில், ''ஷபாஸ் ஷெரீப் மற்றும் சர்தாரி மாபியா அரசு தாங்கல் கடந்த 30 ஆண்டுகளில் சட்டவிரோதமாக குவித்த சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவும், பாதுகாக்கவும் பாகிஸ்தானை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், வெறும் மூன்றே மாதங்கலை மண்டியிட வைத்தள்ளனர். இதை எத்தனை காலத்துக்கு தான் அரசு அமைப்புகள் வேடிக்கை பார்க்கும் என்பது தான் என் கேள்வி" என்று பதிவிட்டுள்ளார்.
Recommended Video

வெகு தொலைவில் இல்லை
இதேபோல் அவர் வெளியிட்டுள்ள 2-வது டுவிட் பதிவில், ''நான் இந்த நாட்டு மக்களுடன் கலந்து உரையாடிய வகையிலும், எனது போராட்டத்துக்கு அவர்கள் அளித்த அதரவை வைத்தும், நான் கூறுவது என்னவென்றால், ஷபாஸ் ஷெரீப் மற்றும் சர்தாரி மாபியா கும்பலை தொடர்ந்து கொள்ளையடிக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இலங்கையை போல நம் நாட்டு மக்களும் வீதியில் இருங்கி போராடும் நிலை வெகு தொலைவில் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications