இரவில் மின்வெட்டு.. படிக்கப்போன மாணவி மீது மெழுகுவர்த்தி விழுந்து.. விபரீதத்திற்கு காரணமான ஸ்கர்ட்!
கொல்லம்: இந்தியாவில் கடுமையான நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்கள் மின்வெட்டால் தவித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் சில நாட்களுக்கு முன்பு கடுமையான மின்வெட்டு இருந்துவந்த நிலையில், தற்போது நிலைமை ஓரளவுக்குச் சீரடைந்துள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், மாணவர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில்தான், மின்வெட்டு ஏற்பட்டதால் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து படிக்கச் சென்ற மாணவி தீப்பற்றி பலியாகியுள்ளார்.

கேரளா மாநிலம், கொல்லம் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அணில்-லீனா தம்பதி. அணில் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், லீனா ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மியா (17), அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
நேற்று லீனாவுக்கு இரவுப் பணி என்பதால் வேலைக்குச் சென்றுவிட்டார். மகள் மியா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு 8 மணியளவில் அந்தப் பகுதி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் படிப்பதற்காக மியா அங்கிருந்த மெழுகுவர்த்தியை ஏற்றியுள்ளார்.
அப்போது கையிலிருந்து தவறி விழுந்த மெழுகுவர்த்தி மியாவின் உடல் மீது விழுந்தது. முன்னதாக, மியா தான் அணிந்திருந்த ஆடையை பெயிண்ட் உடன் கலக்கும் தின்னரை துடைக்கப் பயன்படுத்தியுள்ளார். 'தின்னர்' விரைவில் தீப்பற்றும் தன்மை கொண்டது. இதனால் அதில் தீ பட்டதும் மளமளவென்று பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
தீப்பற்றியதால் வலியில் கத்திய மியாவை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், படிப்பதற்காக மெழுகுவர்த்தி ஏற்றிய பள்ளி மாணவி தீப்பற்றி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications