சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னா இது.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறதே.. ஆனால் இது அது இல்லை.. வைரலாகும் வீடியோ

தைலாசின் புலியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சிட்னி: பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறது.. ஆனால் நாய் இல்லை.. இது ஒரு புலி.. இந்த இன வகையே இப்போது அழிந்துவிட்டது.. 1932-ல் வாழ்ந்து வந்த இந்த புலியின் வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    உலகின் அழிந்து போன புலி இனம்... வைரலாகும் வீடியோ

    எத்தனையோ அறிவியல் மாற்றங்கள் தினந்தோறும் நடந்து வருகின்றன.. எத்தனையோ பூலோக நிகழ்வுகளும், சுற்றுசூழல் மாற்றங்களும் அரங்கேறி கொண்டே இருக்கின்றன.. இதில் இயற்கை சீற்றங்களும் ஒன்று.

    அத்தகைய இயற்கை சீற்றங்களில் ஏராளமான உயிரினங்கள் அழிந்து உள்ளன.. அவைகளில் பல நாம் கண்ணால்கூட பார்த்தது இல்லை.

    எங்கள் நாட்டு இறையாண்மையை மதிக்க வேண்டும்.. நேபாளத்திற்கு இந்தியா கண்டனம்.. தொடரும் உரசல்எங்கள் நாட்டு இறையாண்மையை மதிக்க வேண்டும்.. நேபாளத்திற்கு இந்தியா கண்டனம்.. தொடரும் உரசல்

     டைனோசர்

    டைனோசர்

    நமக்கு தெரிந்தவரை அப்படி கண்டுபிடித்த ஒரு உயிரினம் டைனோசர்தான்.. அவ்வளவு நீளமான, உயரமான, அசுரத்தனமான விலங்கை சினிமாவில் பார்த்தே அசந்துபோய்விட்டோம். கடைசிவரை நம்மால் அந்த டைனோசரை சினிமாவில்தான் பார்க்க முடிந்தது.

     வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    அதுபோலவே ஒரு உயிரினம்தான் அரிய வகையான புலி.. பொதுவாக புலி இனமே அழிந்து கொண்டுதான் வருகிறது.. தேசிய விலங்கு என்றாலும் இதன் எண்ணிக்கை நம் நாட்டை பொறுத்தவரை குறைவுதான்.. தற்போது ஒரு புலியின் வீடியோ வைரலாகி வருகிறது.

    தைலாசின்

    தைலாசின்

    1932-ல் எடுக்கப்பட்ட வீடியோ அது.. ஆஸ்திரேலியாவின் தேசிய திரைப்பட, ஒலி காப்பகம் (NFSA) அமைப்பு இந்த புலி வீடியோவை வெளியிட்டுள்ளது.. இதற்கு பெயர் தைலாசின் என்பார்கள்.. டாஸ்மேனியா என்றும் சொல்வார்களாம்.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறது.. அதன் உடம்பில் வரிவரியாக மெல்லிய கோடுகளும் உள்ளன.. வழக்கமாக புலிகளுக்கு காணப்படும் முடிகள் இதற்கு இல்லை.. அதன் வாலும் நாயை போலவே நீட்டி கொண்டு விறைப்பாக இருக்கிறது.

     பெஞ்சமின்

    பெஞ்சமின்

    மொத்தம் அந்த வீடியோ 21 செகண்ட்கள் ஓடுகிறது. அந்த காலத்தில் எடுக்கப்பட்டதால் பிளாக் & ஒயிட் வீடியோதான்.. ஏதோ ஒரு பயணக்குறிப்புக்காக இந்த வீடியோவை அப்போது எடுத்துள்ளனர். டாஸ்மேனியா பக்கத்தில் ஒரு மிருகக் காட்சி சாலையில் இந்த புலி சுற்றி திரிந்தபோது, பெஞ்சமின் என்பவர் வீடியோவாக இதை எடுத்துள்ளார் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.

    கடைசி புலி

    இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், இந்த புலி இனம் 40 லட்சம் வருஷத்துக்கு முன்னாடி பூமியில் நிறைய வாழ்ந்து வந்திருக்கிறது.. ஆனால் அவைகளில் பெரும்பாலும் வேட்டையாடியே சாப்பிட்டுள்ளனர் நம் முன்னோர்கள்... இதைதவிர இயற்கை சீற்றத்திலும் பல புலிகள் மாண்டுவிட்டன.. இந்த வீடியோவில் உள்ளதுதான் கடைசி புலியாம்.. இதுதான் "கடைசி புலி" என்று சொல்வதை கேட்கவும், பார்க்கவும் மனதுக்கு கஷ்டமாகவே உள்ளது!!

    English summary
    1935 showing last known tasmanian tiger in australlian, rrare video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X