பலமுறை உருண்ட கார்.. உயிரை மீட்க நடந்த போராட்டம்.. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலியானது எப்படி? நடந்தது என்ன?
சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலியானது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
நேற்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பலியானார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போதுதான் வெளியாகி உள்ளது.
உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு 46 வயதே ஆவது குறிப்பிடத்தக்கது. டவுன்ஸ்வில் என்ற நகரத்தில் காரில் செல்லும் போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கினார்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

எப்படி?
இந்த நிலையில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலியானது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இவரின் கார் வேறு கார் எதிலும் மோதி விபத்திற்கு உள்ளாகவில்லை. மாறாக கார் தடம் புராணத்தில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய நேரப்படி நேற்று மாலை 7 மணி அளவில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் ஹெர்வி ரேஞ்ச் ரோடு பகுதியில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி
அந்த சாலைக்கு அருகில் இருக்கும் ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் பகுதியில்தான் விபத்து நடந்து உள்ளது. இந்த பாலம் முடிந்ததும் கார் இடது பக்கம் திரும்பி உள்ளது. ஆனால் கார் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்படியே தடம் புரண்டு, சாலையில் மேலும், கீழும் புரண்டு போய் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்து
காரில் அப்போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மட்டுமே இருந்துள்ளார். காரில் வேறு யாரும் இல்லை. விபத்து நேர்ந்த போது அருகில் இருந்த சிலர் உடனே அவசர உதவி எண்களுக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவருக்கு முதல் உதவி கொடுக்கப்பட்டது. அங்கேயே அவர் மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஷாக் கொடுத்து அவரின் இதயத்துடிப்பை மீட்க முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.

நடந்தது என்ன?
ஆனால் பல முறை முயன்றும் அவரின் இதய துடிப்பை மீண்டும் கொண்டு வர முடியவில்லை. இவரின் உயிரை மீட்க சில மணி நேரங்கள் கடும் போராட்டமே நடந்துள்ளது. அவரின் உடலில் பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவரின் உடல் அதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இவரின் உடல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதிர்ச்சி செய்தி
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பொதுவாக குடி பழக்கம் அதிகம் கொண்டவர். இதனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாரா என்ற சோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர் விபத்து ஏற்பட்ட பகுதியில் இருக்கும் கார் பாகங்கள் தற்போது போலீசார் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. காரில் பிரேக் பெயிலியர் உள்ளிட்ட ஏதாவது பிரச்சனை உள்ளதா என்றும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணத்திற்கு கிரிக்கெட் உலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.