தினேஷ் கார்த்திக் இன்.. பண்ட் அவுட்.. அஸ்வின் நிலை? பாகிஸ்தானுடன் ஆடும் 11 இந்திய வீரர்கள் யார் யார்
சிட்னி: நாளை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட போகும் 11 இந்திய வீரர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2022 டி 20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டு முறை சாம்பியன் அணியான மேற்கு இந்திய தீவுகள் அணி சூப்பர் 12 சுற்றுக்கே தேர்வாகாமல் வெளியேறி உள்ளது.
அதேபோல் கடந்த சீசனில் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அவர்கள் சொந்த மண்ணிலேயே இந்த முறை நியூசிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வியோ அடைந்துள்ளது.

முக்கியமான ஆட்டம்
இந்த நிலையில் பாகிஸ்தானை நாளை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது. நாளை பாகிஸ்தானுக்கு எதிராக நடக்க போகும் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான ஆட்டம் ஆகும். முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை வீழ்த்திவிட்டால் குழு ரீதியாக இந்திய அணி முன்னிலை பெறும். அதேபோல் மனோ ரீதியாகவும் இந்திய அணி நம்பிக்கையாக ஆட தொடங்கும். கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்தது, இந்திய அணிக்கு மன ரீதியாக மிக பெரிய அடியை கொடுத்தது.

இந்திய அணி
அதுபோல நடக்காமல் இருக்க நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. நாளை நடக்கும் போட்டியில் கண்டிப்பாக தினேஷ் கார்த்திக் இடம்பெறுவார் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியில் ரிஷப் பண்ட் சரியாக ஆடுவது இல்லை. கிடைத்த வாய்ப்புகளையும் அவர் சரியாக பயன்படுத்தவில்லை. இதனால் கண்டிப்பாக தினேஷ் கார்த்திக்தான் இந்திய அணியில் இடம் பிடிப்பார்.

டெத் ஓவர்
இந்திய அணியில் டெத் ஓவர் பிரச்சனை சரி செய்யப்படவில்லை. ஷமி கடந்த பயிற்சி ஆட்டத்தில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அந்த ஓவரில் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் ஆடும் 11ல் இவர் இடம்பெற வாய்ப்பு உள்ளது. ஹர்ஷல் பட்டேல் சரியாக பந்து வீசுவது இல்லை. இன்னொரு இரண்டு பாஸ்ட் பவுலர்களாக அர்ஷிதீப் சிங் மற்றும் புவனேஷ்குமார் ஆகிய இருவரும் ஆடும் வாய்ப்புகள் உள்ளன. இது போக இரண்டு ஸ்பின் பவுலர்களாக சாஹல் மற்றும் அஸ்வின் ஆட வாய்ப்புகள் உள்ளன.

பவுலர்கள்
இவர்கள்தான் 5 பவுலர்கள். இது போக 6வது பவுலராக ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக களமிறங்குவார். இது போக இந்தியாவின் டாப் ஆர்டரில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் ஆகியோர் கண்டிப்பாக ஆடுவார்கள். இதனால் இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் , தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின், சாஹல், அர்ஷிதீப் சிங் மற்றும் புவனேஷ்குமார் ஆகியோர் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications