For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ்ஸில் வந்த அரிசி ஆலை அதிபரிடம் மயக்க பிஸ்கெட் கொடுத்து 1 லட்சம் ரூபாய் கொள்ளை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கோயம்பேட்டுக்கு பஸ்ஸில் வந்த தொழிலதிபர் ஒருவருக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்தது. பஸ் நின்றவுடன் பயணிகள் இறங்கினர். ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்கவில்லை.

தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து கண்டக்டர் நடராஜன் அவரை எழுப்ப முயன்றார். அப்போது அவர் மயங்கி கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகுமார் விரைந்து சென்று மயங்கி கிடந்த பயணியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலையில் அந்த பயணிக்கு மயக்கம் தெளிந்தது.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மயங்கி கிடந்தவர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகிரெட்டி என்றும், அரிசி ஆலை நடத்தி வருகிறார் என்றும் தெரிய வந்தது.

செங்குன்றத்தில் உள்ள நபரை பார்க்க வந்துள்ளார். அப்போது தனது கைப்பையில் ரூபாய் 1 லட்சம் எடுத்து வந்தார். அவரின் பக்கத்தில் அமர்ந்த மர்ம நபர் நாகி ரெட்டிக்கு பிஸ்கட் கொடுத்து உள்ளார். அதை தின்றவுடன் நாகிரெட்டி மயக்கம் அடைந்தார்.

இதை பயன்படுத்தி மர்ம நபர் ரூபாய் 1 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு மாயமாகி விட்டார். அவர் பஸ்சில் இருந்து எங்கு இறங்கினார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
Man lossed 1 lakh rupee in bus due to ate biscuit with Anesthesia. Police filed case and investigating about this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X