For Daily Alerts
தமிழகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி பேருந்துகள் இயங்காது.. 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி பேருந்துகள் இயங்காது என 10 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஏப்ரல் 5-ம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதுவம் போராட்டம் நடைபெறுகிறது. இதற்காக வணிகர்கள் கடையடைப்பு நடத்துமாறு விக்கிரமராஜாவிடம் ஸ்டாலின் ஆதரவு கேட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை மறுநாள் திமுக நடத்தும் போராட்டத்துக்கு 10 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஏப்ரல் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் நடைபெற்ற 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!