ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும் ராஜராஜ சோழனுக்கு இன்று 1032வது சதய விழா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1032வது சதய விழா இன்று தஞ்சையில் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது.

உலக புகழ் பெற்று விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ராஜராஜசோழன் சதயவிழா

ராஜராஜசோழன் சதயவிழா

தமிழ்நாட்டை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும் சோழ மன்னர்களில் சிலர் மட்டுமே மக்கள் மனதில் நிற்கின்றனர். அவர்களில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை மக்கள் கொண்டாடுகின்றனர். ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் பொற் காலமாக கருதப்படுகிறது.

தேர்தல் நடத்திய மன்னர்

தேர்தல் நடத்திய மன்னர்

குடவோலை முறையை கொண்டு வந்து இன்றைய தேர்தலுக்கு அன்றே வித்திட்டவன் ராஜராஜன். நாவாய்(பாய்மர கப்பல்) ஓட்டி கடல் வணிகத்திலும் சிறந்து விளங்கினான். இது அன்றைய காலகட்டத்தில் அகில இந்திய அளவில் எந்த ஒரு மன்னரும் செய்யாத சாதனை ஆகும்.

பிரகதீஷ்வரர் ஆலயம்

பிரகதீஷ்வரர் ஆலயம்

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை ட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது.
எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

1032வது சதயவிழா நிகழ்ச்சி

1032வது சதயவிழா நிகழ்ச்சி

இந்த ஆண்டு 1032வது சதயவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்காக நாளை உள்ளூர் விடுமுறையும் விடபட்டுள்ளது. ராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பெரிய கோயில் மின் விளக்கு அலங்காரத்தினால் ஜொலிக்கிறது. ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது.

பெரியகோவிலில் கோலாகலம்

பெரியகோவிலில் கோலாகலம்

ராஜராஜ சோழனின் சதயவிழாவையொட்டி, கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெருவுடையார் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். ஓதுவார்கள் ஓத சிறப்பு ஆராதனை நடைபெற, விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாமன்னருக்கு மரியாதை

மாமன்னருக்கு மரியாதை

மாமன்னருக்கு மரியாதை

கல்வெட்டுக்களில் பெயர்கள்

கல்வெட்டுக்களில் பெயர்கள்

ஆலயத்தின் திருப்பணிக்கு உதவியவர்கள் அனைவரின் பெயரையும் பொறித்து வைத்துள்ள மன்னனின் மனசு விசாலமானது. ராஜராஜன், தலைமைத் தச்சன் குஞ்சரமல்லன், அவனது உதவியாளர்கள் நித்த வினோதப் பெருந்தச்சன், கண்டராதித்த பெருந்தச்சன். பெரும் கொடை வழங்கிய ராஜராஜனின் சகோதரி குந்தவை, பல்வேறு கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்துக்கொண்ட ராஜராஜனின் சேனாபதி கிருஷ்ணன் ராமன், நிர்வாக அதிகாரி பெய்கைநாட்டுக் கிழவன் தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜனின் குருமார்கள் ஈசான சிவபண்டிதர், சர்வ சிவ பண்டிதர், மகன் ராஜேந்திரன், கோயிலின் தலைமைக் குரு பவனப்பிடாரன், கல்வெட்டுகளைப் பதிப்பித்த இரவி பாருளுடையான்..! ஆகியோரின் பெயர்கள் கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளது. மாமன்னர் ராஜராஜனின் சதயவிழாவை நாமும் கொண்டாடுவோம்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The 1032th sadhaya vizha of King Raja Raja Cholan, who built Big temple,held on October 29,Saturday and October 30, Sunday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற