For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் 2 ரிசல்ட்: மார்க் குறைந்தால் கவலைப்படாதீங்க 104க்கு போன் பண்ணுங்க

பிளஸ் 2 வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களின் மன அழுத்தம் போக்க 104 தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க 104 தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதன்படி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வில் வெற்றி பெற்றாலும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகி தவறான முடிவை நாடுகின்றனர்.

104 Helplines ready for Plus Two students

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாவதை முன்னிட்டு தேர்வில் தோல்வி அடையும் , குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தவறான முடிவை நாடாமல் இருக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்க 104 தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான உடன் பதற்றமடையும் மாணவர்கள் , பெற்றோர் தயக்கமில்லாமல் ஆலோசனை பெற 104 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதை முன்னிட்டு இதற்காக 104 மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பதற்றம், மனச்சோர்வில் இருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மனதத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள்

English summary
Plus Two results today announces stress levels are high among students and parents. government run 104 health helpline.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X