For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

144 தடை விதித்துவிட்டு ரத யாத்திரைக்கு அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? வேல்முருகன் நறுக்

144 தடை ஆணை பிறப்பித்துவிட்டு ரத யாத்திரைக்கு அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரத யாத்திரைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களால் நெல்லையில் பதட்டம்- வீடியோ

    சென்னை: 144 தடை ஆணை பிறப்பித்துவிட்டு ரத யாத்திரைக்கு அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி விஎச்பியின் ராமராஜ்ய ரத யாத்திரை இன்று தமிழகம் வந்தடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    144 will not be applicable for ratha yathra?: Velmurugan

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் ரத யாத்திரை குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், ஒற்றுமையை சீர்குலைக்கவே ரத யாத்திரை நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

    144 தடை ஆணை பிறப்பித்துவிட்டு ரத யாத்திரைக்கு அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பிய அவர், அரசியல் சட்டத்தை அனைவருக்கும் பொதுவாக பயன்படுத்த வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்த வேல்முருகன், அத்வானி நடத்திய ரத யாத்திரை நாட்டின் பன்முகத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தியது என்றும் கூறினார்.

    English summary
    TVK leader Velmurugan condemns the arrest of protesters against Rama Rajya Ratha yathra. He also asked how 144 will not be applicable for ratha yathra?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X