அழகேசனுக்கு 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கு குற்றவாளி அழகேசனுக்கு 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை கே கே நகரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த அஸ்வினியை கல்லூரி விட்டு வீடு திரும்பும் போது அழகேசன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

15 days judicial custody for Azhagesan

இதில் நிலைத்தடுமாறிய அஸ்வினி உயிரிழந்தார். அழகேசனை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரி அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அஸ்வினி தன்னை காதலித்ததாகவும் , அவரை திருமணம் செய்ததாகவும் கடைசியில் தாய் பேச்சை கேட்டு என்னுடன் பழக மறுத்து தாலியை வீசி தன் முகத்தில் எறிந்ததாகவும் அழகேசன் வாக்கு மூலம் கொடுத்தார்.

இந்நிலையில் பொதுமக்கள் அடித்ததில் காயமடைந்த அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அழகேசனை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, கொல்லப்பட்ட மாணவி அஸ்வினியின் உடல் போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Azhagesan who murders Aswini in Chennai College. He was arrested and produced before Saidapet Court and sent to judicial custody for 15 days.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற