சேலம் அருகே ஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம்.. 3 ஓட்டுநர்களை மடக்கிப் பிடித்த மக்கள்!
சேலம் அருகே ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: ஓமலூர் அருகே ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிஅயை பலாத்காரம் செய்த 3 ஓட்டுநர்களை பிடித்து பொதுமக்களே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 15வயது சிறுமி ஒருவர் தனியார் பேருந்தில் நாரணம்பாளையத்துக்கு சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் பேருந்தில் மூன்று ஓட்டுநர்களை தவிர வேறு யாரும் இல்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் பேருந்தில் இருந்த 3 ஓட்டுநர்கள் சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நாரணம்பாளையத்தில் சிறுமி அழுதுகொண்டே இறங்குவதைக் கண்ட பொதுமக்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர்.

மூன்று கொடூரர்கள்
அப்போது சிறுமி நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து பேருந்தை மறித்த பொதுமக்கள் மணிவண்ணன், பெருமாள், முருகன் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைதானவர்களிடம் விசாரணை
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் சிறுமி மூன்று ஓட்டுநர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்திலும் அரங்கேறிய கொடூரம்
இதில் தொடர்புடைய 4 பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் தமிழகத்திலும் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications