For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வர்தா புயலால் 17 ரயில்கள் ரத்து.. பல ரயில்களின் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே

சென்னையை புரட்டி போட்ட வர்தா புயலால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயலால் 17 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ராக்போர்ட் ரயில் உள்பட பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ரயில்கள் கிளம்பும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

வர்தா புயல் சூறைக் காற்றுடன் சென்னை துறைமுகம் அருகே 3 மணி முதல் 5 மணி வரை கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடந்தாலும் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. வட தமிழகத்தில் உள்பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

 17 trains cancelled due to Cyclone Vardah

வர்தா புயல் காரணமாக சென்னையில் பலத்த மழையுடன் அதிவேக காற்று வீசு வருகின்றது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து வெளி நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 17 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு செல்லும் டெல்லி சாராய் ரோஹில்லா ஜி.டி. எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரல் - புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்- மதுரை துரந்தோ ரயில் இரவு 10.30 மணிக்கு பதிலாக 12.15க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரல் - மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்,

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பாசஞ்சர்

சென்னை சென்ட்ரல்-விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்,

சென்னை சென்ட்ரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ்,

சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் .

சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ்

சென்னை சென்ட்ரல்-குடூர் பாசஞ்சர்

சென்னை சென்ட்ரல்-பூரி வாராந்திர எக்ஸ்பிரஸ்

சென்னை சென்ட்ரல்-திருப்பதி கருடாத்திரி எக்ஸ்பிரஸ்

சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 1.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்

சென்னை சென்ட்ரல்-மங்களூர் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர்- சிஎஸ்டிஎம் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு ரயில்கள் சென்னை வழியாக இயக்கப்படும் ரயில்கள் காட்பாடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. திருச்சி ராக்போர்ட் ரயில் நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படும். மன்னார்குடி மன்னை அதிவிரைவு ரயில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும். கொல்லம் சிறப்பு ரயில் நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

English summary
17 trains cancelled due to Cyclone Vardah, says southern raiway
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X