For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே முதல் வாரத்தில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள்?

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் 67 மையங்களிள் பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் மே முதல் வாரம் பிளஸ்டூ ரிசல்ட் வெளியாகலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வுகள் கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில் பெரும்பாலான முக்கிய தேர்வுகள் முடிந்து விட்டன. வரும் 25ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்து விடும். அதன் பிறகு 26ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தொடங்குகி்ன்றன.

பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 67 மையங்களில் நடக்கிறது. தமிழ்தாள் திருத்தும் பணி தொடஙகியது. முதன்மை தேர்வர்கள் மற்றும் கூட்டுனர்கள் கடந்த இரு நாட்களாக இந்த பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

24ம் தேதி முதல் பிற மொழி பாடங்களை தேர்வர்கள் திருத்துகின்றனர். தொடர்ந்து அடுத்த வாரம் முதல் மற்ற பாடங்களுக்கு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. இம்முறை அனைத்து விடைத்தாள்களையும் கடந்த ஆண்டை விட வெகு விரைவாக திருத்தி முடிக்க தேர்வு துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏப்ரல் மாதம் 10ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க தேர்வு துறை முடிவெடுத்துள்ளது. இதை தொடர்ந்து சான்றிதழ் தயாரித்தல் தொடர்பான பணிகளை தேர்வு துறை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இ்ப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மே மாதம் முதல் வாரத்தில் பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இதனால் மும்முரமாக நடந்து வருகின்றன.

English summary
Sources in govt examinations say that the + 2 results may be released by May first week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X