ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்களை எங்கயாச்சும் பாத்திருக்கீங்களா? - விஜயகாந்த் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: எங்காயாச்சும் ஒரு ஓட்டுக்கு 3 முதல்வரை பார்த்திருக்க முடியுமா? தமிழக மக்கள் மட்டுமே 3 முதல்வர்களை பார்த்திருக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடக்கும் தொல்லியல் ஆய்வுப் பணிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பார்வையிட்டார். அவருடன் பிரேமலதாவும் அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டார்.

3 முதல்வர்கள்

3 முதல்வர்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர் ஆட்சி செய்வதாக கூறினார். ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். ஓபிஎஸ் வந்தார் உடனே போய்விட்டார்.

நல்லதே நடக்கலை

நல்லதே நடக்கலை

இப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்துகிறார். மூன்று முதல்வர் மாறியுள்ளதால் தமிழக மக்களுக்கு எந்த நல்லதுமே நடக்கவில்லை என்று கூறினார் விஜயகாந்த்.

குளங்களை தூர் வாரவேண்டும்

குளங்களை தூர் வாரவேண்டும்

ஆறு, குளம் எல்லாம் தண்ணீரில்லாம் வற்றி விட்டது மழைக்கு முன்பாக குளங்களை தூர் வார வேண்டும். தண்ணீர் பிரச்சினை தீரும். ஆனால் ஆள்பவர்களுக்கு அதுக்கெல்லாம் எங்க நேரமிருக்கு என்றார்.

கீழடி வந்தது ஏன்?

கீழடி வந்தது ஏன்?

குலதெய்வம் கோவிலுக்கு போன விஜயகாந்த், கீழடி சென்று அங்கே தமிழக சட்டம் ஒழுங்கு பற்றியும், தமிழக முதல்வர்கள் பற்றியும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK leader Vijayakanth told press person in Keezhadi, TamilNadu People have seen 3 Chief Ministers for one vote.
Please Wait while comments are loading...