தமிழகம் முழுவதும் 31 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் 31 டிஎஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்ட உழல் தடுப்பு டிஎஸ்பி முத்தமிழ் செல்வன் கரூர் மாவட்ட கிராமப்புற துணைப்பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி குற்றப்பிரிவு உதவி ஆணையர் பெரியய்யா சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

31 DSPs have transferred across the state

திருச்சி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் சீனிவாச பெருமாள் ஊழல் தடுப்பு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை டிஎஸ்பி கேகே ராஜேந்திரன் கிருஷ்ணகிரி டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி உதவி ஆணையர் பி ராஜா திருவள்ளூர் குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் டிஎஸ்பி ஆறுமுகம் ஓட்டன்சத்திரம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

31 DSPs have transferred across the state

தேனி குற்றப்பிரிவு டிஎஸ்பி வினோஜி பெரியகுளம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் விருதுநகர் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

31 DSPs have transferred across the state

நெல்லை டிஎஸ்பி சஹாய ஜோஸ் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி மோகன் குமார் மதுரை சமயநல்லூர் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

31 DSPs have transferred across the state

இபேபோல் மாநிலம் முழுவத் 31 டிஎஸ்பிக்கள் மற்றும் காவல் உதவி ஆணையர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
31 DSPs have transferred across the state. Tamil nadu Govt ordered.
Please Wait while comments are loading...