For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீன் ஆலையில் வாயு கசிவு: 54 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா நைட்ரேட் வாயு கசிவால், 50 பெண்கள் உட்பட 56 தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் பதற்றமடைந்த ஆலை நிர்வாகம், தொழிலாளர்களை தூத்துக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். 50 பெண்கள் உட்பட சுமார் 56 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தாளமுத்துநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ரவிக்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

English summary
A total of 54 women workers of a fish processing unit in Tamil Nadu fell unconscious after inhaling a poisonous gas, a senior official said Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X