For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்கே நகரில் 72 வேட்பு மனுக்கள் ஏற்பு- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் சிக்கல்?

ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 59 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் சிக்கல் வரக் கூடும் என தெரிகிறது.

சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி நேற்று முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தால் சரி பார்க்கப்பட்டது.

இதில் 72 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நடிகர் விஷால் வேட்பு மனு முதலில் நிராகரிக்கப்பட்டது. பின்னர் தம்முடைய வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றதாக விஷால் கூறினார். ஆனால் தேர்தல் அதிகாரியோ, விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 72 பேரின் மனு ஏற்பு

72 பேரின் மனு ஏற்பு

இதேபோல் தீபாவின் மனுவையும் ஏற்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் தீபா கட்சியின் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்தனர். எனினும் தற்போதைய நிலவரப்படி 72 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

 அதிகபட்சமாக 4

அதிகபட்சமாக 4

பொதுவாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு பெட்டியில் 16 வேட்பாளரின் சின்னத்தை மட்டுமே பொருத்த முடியும். இதே போன்று அதிகபட்சமாக ஒரு வாக்குச் சாவடிக்கு 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரை இணைக்கலாம்.

 மின்னணு இயந்திரம் பயன்படுத்த முடியுமா

மின்னணு இயந்திரம் பயன்படுத்த முடியுமா

அவ்வாறு 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைத்தாலும் 64 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இடம் பெறும். அப்படியானால் 72 வாக்காளர்கள் போட்டியிடும் நிலையில் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்

தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்

எனவே ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுமா அல்லது வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் டிசம்பர் 7 தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் இருப்பதால் அதற்குப் பிறகே தேர்தல் ஆணையம் இது குறித்து முடிவு செய்யும் என்று தெரிகிறது.

English summary
59 candidates file nomination for RK nager election has been accepted by election commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X