For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டன் பறந்த ரவி பார்த்தசாரதி நிறுவனத்திற்கு அதிக நஷ்டம் தமிழ்நாடு பவர் கம்பெனியால்தான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ.91,000 கோடி கடனில் தத்தளிக்கும் கம்பெனியை கைவிட்ட ரவி பார்த்தசாரதி

    சென்னை: ரூ.91,000 கோடி கடனில் சிக்கித் தவிக்கும், 30 ஆண்டு பழமையான, Infrastructure Leasing & Financial Services Ltd (IL&FS) நிறுவனத்தின் துணை நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆண்டறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

    ஐஎல்&எப்எஸ் நிறுவனத்திற்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு துணை நிறுவனங்கள் உள்ளன. 53 வெளிநாட்டு துணை நிறுவனங்களில் 25 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ஆண்டறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

    [ரூ.91,000 கோடி கடனில் தத்தளிக்கும் கம்பெனியை கைவிட்ட ரவி பார்த்தசாரதி லண்டன் பறந்தார்]

    122 இந்திய துணை நிறுவனங்களில், 72 துணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறதாம். படிப்படியாக ஒரு நிறுவனத்தின் நஷ்டம் பிற நிறுவனங்களுக்கும் தொற்றிக்கொண்டுள்ளது. பணச்சுழற்சியை மேற்கொள்ள முடியாமல் சிக்கியதுதான் இதற்கு காரணம்.

    தமிழ்நாடு பவர்

    தமிழ்நாடு பவர்

    ஐஎல்&எப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி லிமிட்டட்தான், அதில் அதிகப்படியான நஷ்டத்தை சம்பாதித்துள்ளது. அதாவது, ரூ.3,821.15 மில்லியன் இழப்பாம். இதைத்தொடர்ந்து, ஐஎல்&எப்எஸ் மாரிடைம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி லிமிட்டட் ரூ.3,171.91 மில்லியன் மற்றும் ரேபிட் மெட்ரோ ரெயில் குர்கான் சவுத் லிமிட்டட் ரூ.2,432.88 மில்லியன் நஷ்டத்தையும் எதிர்கொண்டதாக ஆண்டறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    தீர்ப்பாயம்

    தீர்ப்பாயம்

    ஐஎல்&எப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி லிமிட்டட் மீது திவால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நிதியளித்தோர் இணைந்து, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடலூரில், இறக்குமதி நிலக்கரி அடிப்படையில், ஐஎல்&எப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி லிமிட்டட்1200 மெகாவாட் அனல் மின் நிலையத்தை செயல்படுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சொத்துக்கள்

    சொத்துக்கள்

    2018ம் ஆண்டு ஐஎல்&எப்எஸ் நிறுவன ஆண்டறிக்கைப்படி, அந்த நிறுவனத்தில் 82 இந்திய துணை நிறுவனங்களுக்கு, மொத்த கடனை அடைக்க தேவையான சொத்துக்கள் இல்லை. இதில், ஐஎல்&எப்எஸ் டிரான்ஸ்போர்டேஷன் நெட்வொர்க்ஸ், எனர்ஜி டெவலப்மென்ட் கம்பெனி, பைனான்சியல் சர்வீஸ் உள்ளிட்டவை அடங்கும்.

    லண்டன் போனார்

    லண்டன் போனார்

    இந்த நிலையில்தான், நிறுவனத்தின் முன்னாள் சேர்மேன் ரவி பார்த்தசாரதி, உடல்நலக்குறைவு என கூறி லண்டன் சென்றுவிட்டார். ஜூலை மாதம் இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் உட்பட மேலும் சில நிர்வாகிகளுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வங்கிகளிலும் கடன் பாக்கி

    வங்கிகளிலும் கடன் பாக்கி

    துணை தலைவரான ஹரி சங்கரன், முன்னாள் மேலாண் இக்குநர் ரமேஷ் பாவா மற்றும் இயக்குநர் ராம்சந்த் ஆகியோருக்கு எதிராக தனித்தனி லுக்அவுட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்திற்கு ரூ.91,000 கோடி கடன் உள்ளது. அதில் ரூ.57,000 கோடி வங்கிகளுக்கு செலுத்த வேண்டியதாகும்.

    English summary
    The IL& FS Group has been facing financial troubles with at least 25 of its 53 foreign subsidiaries booking losses for the fiscal 2018, according to its latest annual report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X