இப்பவே 86% நோட்டுக்களை மாற்றியாச்சு.. அவசரப்பட்டு வங்கிகளுக்கு படையெடுக்காதீர்: ஜேட்லி கோரிக்கை
சென்னை: 86 சதவீத பழைய நோட்டுக்கள் மாற்றப்பட்டுவிட்டதாக கூறியுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அனைவரும் ஒரே நேரத்தில் வங்கிக்கு விரைய வேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆர்.பி.ஐ அதிகாரிகளுடன், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து இன்று ஆலோசனை நடத்திய அருண் ஜேட்லி, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: சில வகை ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஏற்று வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துவரும் பொதுமக்களையும், அலுக்காமல் பணியாற்றும் வங்கி ஊழியர்களையும் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பண புழக்கம் சீரடைகிறதா என்பதை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இன்று மதியம் 12.15 மணி நிலவரப்படி எஸ்.பி.ஐ வங்கியில் மட்டும் 58 லட்சம் மக்கள், நோட்டுகளை மாற்றியுள்ளனர். கடந்த சில நாட்களாக மக்கள் பெருமளவில் நோட்டுக்களை மாற்ற ஆர்வம் காட்டினர். சுமார் 86 சதவீத மக்கள் நோட்டுக்களை மாற்றியுள்ளனர். இதனால்தான் வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இனிமேல் குறையத்தொடங்கும். பணம் கையிருப்பு உள்ளவர்கள், டெபிட், கிரெடிட் கார்டு உள்ளவர்கள் அவசரப்பட்டு வங்கிக்கு சென்று பழைய ரூபாய் தாள்களை டெபாசிட் செய்ய வேண்டாம்.
வரும் டிசம்பர் 30ம் தேதிவரை கால அவகாசம் தரப்பட்டுள்ளதால், பொறுமையாக வங்கிக்கு செல்லவும். இதனால் கூட்டம் குறையும். புதியவகை ரூ.2000 நோட்டுக்களை வழங்குவதற்கு ஏற்ப ஏடிஎம்களில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால்தான் வினியோகத்தில் தாமதம் நிலவுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications