கொடைக்கானல் ஏரியில் அரிய வகை ஜெல்லி மீன்களை கண்டுபிடித்த வேலூர் சிறுவன்
கொடைக்கானல் ஏரியில் அரிய வகை ஜெல்லி மீன்களை ஆராய்ச்சி செய்து அது புதிய இனம் என்று வேலூர் சிறுவன் கண்டறிந்துள்ளார்.
வேலூர்: கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது அங்கு அரிய வகை ஜெல்லி மீன்களை கண்டெடுத்துள்ளார் வேலூரை சேர்ந்த சிறுவன் இஷான் ஆபிரகாம் பிச்சமுத்து.
இவர் வேலூரில் உள்ள ஐடா ஸ்கட்டர் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு கோடை விடுமுறையை கழிக்க கொடைக்கானலுக்கு சென்றார். அங்கு செல்லும் வரை மிகவும் குளிர்ந்த நீரில் ஜாலியாக படகு சவாரி செய்வது என்ற எதிர்பார்ப்புடன்தான் சென்றார்.
9 வயது சிறுவனாயிற்றே ஜாலியான அனுபவங்களை அனுபவிக்கவே கொடைக்கானல் செல்வது என்பது இயற்கையான ஒன்றுதானே . அதுபோல் தான் இவரும் இயற்கை அழகை ரசிக்க சென்றார்.
படகு சவாரி
கொடைக்கானல் ஏரியில் தன் குடும்பத்தினருடன் படகில் சவாரி செய்தார். அப்போது அந்த தண்ணீரில் ஜெல்லி மீனை கண்டார். பூச்சிகள், மீன்கள், மற்ற உயிரினங்கள் மீது ஆர்வம் கொண்ட இஷான், தான் பார்த்த ஜெல்லி மீனை அவரது தந்தை கிஷோர் பிச்சமுத்துவிடம் காண்பித்தார்.

அரிய வகை
பொதுவாக ஜெல்லி மீன்கள் கடலின் ஆழ்கடலில்தான் வசிக்கும். இதுபோன்று நன்னீர்களில் வசிக்காது என்று இஷானிடம் கிஷோர் தெரிவித்தார். இதனால் இனங்களின் சிலவற்றை சேகரிக்க இஷானுக்கு ஆர்வம் ஏற்பட்டது. பொதுவாக எங்கே சென்றாலும் வித்தியாசமான உயிரினங்களை கண்டால் அவற்றின் ஸ்பெசிமேன்களை சேகரிப்பதும் அவற்றை பற்றி தெரிந்து கொள்வதும்தான் இஷானுக்கு மிகவும் பிடிக்குமாம்.

1 செ.மீ. அகலம் கொண்ட மீன்
தந்தையும், மகனும் ஒரு செ.மீ. அகலம் கொண்ட சில ஜெல்லி மீன்களை சேகரித்தனர். கிஷோர் வேலூர் சிஎம்சியில் பணியாற்றி வருகிறார். எனவே சேகரித்த சாம்பிள்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய கரையோர மேலாண்மை மையம் மற்றும் சிஎம்சி மருத்துவமனையில் ஆய்வுக்காக கொடுத்தார்.
அவர்களும் அதை உறுதி செய்தனர்.

இந்திய விலங்கியல் ஆய்வு மையம்
இதைத் தொடர்ந்து அந்த புதிய உயிரினமானது சென்னையில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அந்த மையத்தின் முன்னாள் இயக்குநர் கே.வெங்கட்ராமன் கூறுகையில், இஷான் கண்டுபிடித்த ஜெல்லி மீன் இந்தியாவில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அபூர்வம்
நன்னீரில் வாழும் ஜெல்லி மீன்கள் மிகவும் அரிதானவை. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஜெல்லி மீன்களின் இனப்பெருக்க முறை மற்றும் உணர் கொம்புகளின் எண்ணிக்கை ஆகியன கடந்த 1912-ஆம் ஆண்டு மும்பையில் காண்ட்லாவில் கண்டறிந்ததைக் காட்டிலும் வித்தியாசமானவையாகும் என்றார். இஷானின் இந்த கண்டுபிடிப்பு விலங்குகள் கண்டுபிடிப்பு ஆவணத்தில் இந்திய விலங்கியல் மையத்தால் இந்த ஆண்டு சேர்க்கப்பட உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications