For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவியைக் கொல்ல பக்கா ப்ளான்! இருட்டில் மாறிப்போன கெளசர்! துடித்து அடங்கிய உயிர்! அலறிய ஆம்பூர்

Google Oneindia Tamil News

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சாலையோரம் படுத்திருந்த பெண்ணை தனது மனைவி என நினைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த மாட்டு வியாபாரியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்கும் கடையின் வெளியே ஆம்பூர் பகுதியை சேர்ந்த சில பெண்கள் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் படுத்துறங்கிய பெண்களை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கௌசர் மற்றும் தனலஷ்மி ஆகிய இரு பெண்கள் ரத்த வெள்ளத்தில் மீட்ட உடனிருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் கொலை

பெண் கொலை

அங்கு சிகிச்சை பலனின்றி கௌசர் என்ற பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்,. படுகாயமடைந்த தனலசுமி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கத்தியால் குத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பது தெரியவந்தது.

கணவருடன் தகராறு

கணவருடன் தகராறு

மாட்டு வியாபாரியான அவரது முதல் மனைவி ரேணுகாம்பாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இறந்துவிட்டதால் அவரது மனைவி தனலட்சுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் தனலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு அடிக்கடி ஆம்பூர் வந்துவிடுவார்.

கொலை செய்ய திட்டம்

கொலை செய்ய திட்டம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரன் தனலட்சுமி இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து தங்கியிருந்தார். தேவேந்திரனின் மனைவி தனலட்சுமி ஆம்பூரில் உள்ள கடைகளின் முன்பாக இரவில் உறங்குவதாக தேவேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதனிடையே தனலாஷ்மியை தேடி நேற்று நள்ளிரவு ஆம்பூர் பகுதியிற்கு வந்து சாலையின் ஓரம் காலணி கடையின் வெளியே உறங்கிகொண்டிருந்ததை பார்த்து கத்தியால் குத்திய தனலட்சுமியை குத்த நினைத்துள்ளார்.

இருட்டில் தாக்குதல்

இருட்டில் தாக்குதல்

இருட்டில் அடையாளம் தெரியாமல் தன்னுடைய மனைவி தனலட்சுமி என்று நினைத்து தான் எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து கவுசரின் கழுத்து மார்பு என சரமாரியாக குத்தினார். அப்போது கவுசர் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தார். அப்போதுதான் தான் குத்தியது மனைவியல்ல வேற ஒருவரின் மனைவி என தேவேந்திரனுக்கு தெரியவந்தது. அலறல் சத்தம் கேட்டு தனலட்சுமி திடுக்கிட்டு எழுந்தார். தனலட்சுமியை கண்ட தேவேந்திரன் ஆத்திரம் அடங்காமல் அவரையும் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

கொலையாளி கைது

கொலையாளி கைது

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தேவேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கபட்ட நிலையில் கெளசர் உயிரிழந்த நிலையில், தனலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கத்தியால் குத்திய தேவேந்திரனை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த கௌசருக்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Police have arrested a cattle dealer who allegedly stabbed a woman lying on the roadside in Ambur, Tirupati district to be his wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X