For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுபான்மை அரசை பதவியில் நீடிக்க வைப்பது ஜனநாயக விரோதம்.. ஆளுநர் மீது துரைமுருகன் குற்றச்சாட்டு

சிறுபான்மை அரசை பதவியில் நீடிக்க வைப்பது ஜனநாயக விரோதம் என்று எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கோவை: பெரும்பான்மை இல்லாத அரசு ஆட்சியில் நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று திமுக மூத்த தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன் விமர்சித்தார்.

A minor regime still continues is against democracy, says Durai murugan

இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிறுபான்மை அரசை பதவியில் நீடிக்க வைப்பது ஜனநாயக விரோதமாகும். அரசுக்கு ஆதரவு இல்லை என எம்எல்ஏக்கள் கூறுவது உட்கட்சி விவகாரம் இல்லை. இதை உள்கட்சி பிரச்சினை என்று ஆளுநர் கூறுவது நியாயமா?

ஆளுநரிடமே நேரடியாக எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ் கடிதத்தை அளித்துள்ளனர். எம்எல்ஏக்கள் நேரடியாக கடிதம் கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்காதது ஆளுநரின் பதவிக்கு உகந்ததல்ல. மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் ஆளுநர்கள் ஆடமாட்டார்கள் என்பதுதான் பழைய வரலாறு என்றார் அவர்.

English summary
Assembly's Opposition's Deputy Chief Durai Murugan (DMK) says that a party which has no majority continues to be in power is against to Democracy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X