For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரும்பி வராத புதிய ரூபாய் நோட்டுகள்: சிக்கலோ சிக்கல்

Google Oneindia Tamil News

நெல்லை: வங்கிகளில் இருந்து வினியோகம் செய்யப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மறு சுழற்சிக்கு திரும்பி வராததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். மறுநாள் வங்கிகள் மூடப்பட்டன. 10ம் தேதி முதல் வங்கிகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டது. துவக்கத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்றவர்களுக்கு 4 ஆயிரமும், பின்னர் 4,500ம், கடைசியாக 2000ம் வழங்கப்பட்டது.

A new issue for Banks now

வங்கிகளை பொறுத்தவரை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 10 ஆயிரம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் போதிய 100 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் இந்த நோட்டுகளுக்கு சில்லறை கிடைக்காமல் பொதுமக்களும், வியாபாரிகளும் திண்டாடினர். அதே நேரத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் வினியோகிக்கப்பட்ட போதிலும் மறு சுழற்சிக்கு மீண்டும் வங்கிக்கு வருவது குறைந்துள்ளது.

700 கோடி அளவிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்த போதிலும் அவை அனைத்தும் வங்கிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த பணம் மீண்டும் வங்கி பரிவர்த்தனைக்கு வருவது குறைந்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்று கொண்டு அதே அளவுக்கு பழைய 100 ரூபாய் அல்லது புதிய 500 ரூபாய் வந்திருந்தால் வினியோகம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கி பரிவர்த்தனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Recently introduced Rs. 2000 notes that have ben given to people by banks haven't returned for transactions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X