For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயிற்றைக் கலங்கடிக்கும் “வாடகை வீடு” தேடுதல் வேட்டை.... இது சிங்கார சென்னையின் கதை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை...இந்த நகரம் பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்ட மனிதர்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.

எனினும், சென்னையில் வசிப்பிடம் என்ற ஒன்று மட்டுமே பல்வேறு மனிதர்களுக்கும், முக்கியமாக முதன்முறையாக சென்னைக்கு வேலைக்கு வருகின்ற இளைஞர்-இளைஞிகளுக்கு பெரிய கஷ்டம்.

எத்தனையோ ஆப்கள், வசதிகள் இருந்தாலும் வருமானத்திற்கு தகுந்தாற்போல், தனிமையும் உறுத்தாமல் வீடு தேடுவது மிகவும் கடுமையான வேலைதான்.

A story about Chennai's rental homes

இதில், சென்னையில் வாடகைக்கு வீடு தேடுவது பெரிய கச்சடா பிடித்த வேலை வாழ்க்கையில் என்றாலும், இதுவரையில் இருந்த வீட்டைக் காலி செய்வது ஒரு கலை.

லிஸ்டோ லிஸ்ட்:

காலி செய்வதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே என்னவெல்லாம் செட்டில் செய்ய வேண்டும், வாடகை முன்னாடி கொடுத்தோமா, பின்னாடி கொடுத்தோமா, மெயிண்டெனன்ஸ், பவர் பில், கேஸ் என்று பட்டியல் எழுத, எழுத நீண்டு கொண்டே போகும்.

எதை விட்டோம் எதை எடுத்தோம்:

அதைவிடக் கொடுமை சொந்த வீடு இல்லாதவர்களுக்கும், நிரந்தரமான வசிப்பிடம் இல்லாதவர்களுக்கும் சென்னையில் "பிரசண்ட் அட்ரஸ்" என்பதே இருக்காது... சில நேரங்களில் முக்கியமான கடிதங்கள், அழைப்புகள் கூட இதனால் தவறிவிடும். அதையெல்லாம் சரி செய்து நிமிர்ந்தால் "பேக்கிங்" என்று ஒன்று கண் முன்னால் வந்து நிற்கும்.

மூச்சு முட்ட வைக்கும் சென்னை:

ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கும், குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கும் இந்த பேக்கிங்கில் பிரச்சினை இருக்காது. ஹோட்டலில் சாப்பிடும் பேச்சுலர்களுக்கு பெரும்பாலும் கிச்சன் பாத்திரங்கள் கையிருப்பில் இருக்காது...குடும்பத்துடன் வசிப்பவர்கள் பெரும்பாலும் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் மூலமாக மாற்றி விடுகின்றார்கள்.

பெண்டு கழட்டும் வேலை:

ஆனால், இந்த ரெண்டும் கெட்டானாக இருக்கும் நண்பர்களுடன் வீட்டில் வசிப்பவர்களுக்குத்தான் எல்லா பிரச்சினைகளும். நம்முடைய பொருட்கள், அவர்களுடைய பொருட்கள் கலக்காமல் எடுத்து வைக்க வேண்டும்...சில நேரங்களில் மாற்றி எடுத்துச் சென்று விடுவதும் உண்டு. உடையும் பொருள், உடையாதது என்றெல்லாம் பார்த்து பார்த்துப் பெட்டிகளில் அடைக்க வேண்டும்... பைசா பெறாத பாட்டில் என்றாலும் அடுத்த வீட்டுக்கு தேவைப்படுமே என்று பத்திரப்படுத்த வேண்டும்..

சீக்கிரம் சொந்த வீடு:

அடுத்ததாக நெக்ஸ்ட் ஜாகைக்கு அவற்றை எடுத்துச் செல்ல ஒரு வண்டி பிடித்தாலும், நாமே வேலையாள், ஏற்றி இறக்குபவர் எல்லாமுமாக மாறி நிற்க வேண்டும். நான் பாதி நாள் ஓட்டுபவரின் பக்கத்தில் கிளீனர் சீட்டில் உட்கார்ந்தே புது வீட்டிற்குச் சென்றிருக்கின்றேன்... எல்லாம் செட்டில் செய்து அப்பாடா என்று நிமிரும்போதுதான் பழைய வீட்டில் இருந்து போன் வரும் "ஏம்மா...நீ ஒரு பேக்கேஜ் விட்டுட்டு போய்ட்ட இருக்கட்டுமா இல்லை குப்பைல போட்டுடட்டுமா" அப்டினு... இதுக்காகவே சொந்த வீடு வாங்கிடணும் போல...

English summary
Rental house in Chennai is very difficult to find and shift.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X