சாலையோரம் பெட்டி கடை வைப்பதற்கு ஆதார் அட்டை அவசியம்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலையோரம் பெட்டிக்கடை வைப்பதற்கு ஆதார் அட்டை அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்களை பெற, முதியோர் பென்ஷன் பெற, சிலிண்டர் மானியம் பெற என அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையோரம் பெட்டிக்கடைகள் வைக்கவும் ஆதார் கார்டு கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Aadhaar Card is mandatory to Keep petti shops on the road side: Chennai high court

சாலையோரம் பெட்டிக்கடை வைப்பதற்கு அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என ஹைகோர்ட்டில் பொது நலவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உரிமம் பெறுபவர்கள் வேறு நபர்களுக்கு விற்றுவிடுவதாக மாநகராட்சி தரப்பில் வாதாடப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஒரு நபர் அதிக பெட்டிக்கடைகளை திறக்க தடை விதிக்க ஏதுவாக, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு விண்ணப்பம் செய்யும் போது, ஒரு மாதத்தில் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் அருகே பெட்டிக்கடை வைக்கவும், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கவும் அனுமதி இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Chennai High Court has ordered that Aadhaar Card is mandatory to Keep petti shops on the road side. High court orders to do not keep petti shops near school, college, hospitals and the tobacco products, including cigarettes, are not allowed to sell.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற