For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிமாதம்... 108 அம்மன் கோவில்களை தரிசனம் செய்யனுமா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் திருவிழா களை கட்டும். பெண் பக்தர்களுக்காக தமிழக அரசு அம்மன் தரிசன சுற்றுலாவிற்கு கடந்த சில ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகிறது. மாநில அளவில் பிரசித்திப் பெற்ற 108 அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆடி மாதச் சுற்றுலா திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆன்மிக சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோயில்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Aadi month 108 Amman Dharisanam in TTDC’s

அதேபோல் நிகழாண்டிலும் சென்னை-காளிகாம்பாள், மேல்மருவத்தூர்-ஆதிபராசக்தி, சிதம்பரம்-அகிலாண்டேஸ்வரி, வைத்தீஸ்வரன் கோயில்-தையல் நாயகி, மாயவரம்-படைவேட்டையம்மன், திருக்கடையூர்-ஸ்ரீஅபிராமி, காரைக்கால்-அம்மையார், நாகப்பட்டினம்-நீலாயதாட்சியம்மன், மதுரை-மீனாட்சி அம்மன், திரௌபதி அம்மன், உறையூர்-வெக்காளியம்மன், திருவானைக்காவல்-அகிலாண்டேஸ்வரி, சமயபுரம்-ஆதிமாரியம்மன், சிறுவாச்சூர்-மதுரகாளியம்மன், திருவக்கரை-வக்ரகாளியம்மன் உள்ளிட்ட 108 அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இச்சுற்றுலா இந்த மாதம் நடத்தப்படுகிறது.

இச்சுற்றுலா ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஐந்தாம் நாள் இரவு சென்னை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாள்களில் சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு நாளும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடத்தப்படும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவர். இதில் முதல் நாளில் வைத்தீஸ்வரன் கோயிலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், 2ஆம் தஞ்சாவூர் தமிழ்நாடு ஹோட்டலிலும், 3வது நாள் மதுரை தமிழ்நாடு ஹோட்டலிலும், 4ஆம் நாள் திருச்சி தமிழ்நாடு ஹோட்டலிலும் என ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டணம்: இச்சுற்றுலாவிற்கு குளிரூட்டப்பட்ட பேருந்து, தங்கும் வசதியுடன் 2 பேருக்கு ரூ.5,500, 4 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு-ரூ.4,900, தனி நபருக்கு தனி அறை வசதியுடன் ரூ.6,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த விவரங்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 25333444, 25333333, 25333857, 25333286 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் http://www.ttdconline.com/tourname.do என்ற இணையதளத்திலும் தகவல்களைப் பெறலாம்.

English summary
Minister for Tourism S Gokula Indira on Wednesday inaugurated the one-day Deviar Dharisanam Tour, organised by the Tamil Nadu Tourism Development Corporation (TTDC).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X