அத்தனை அநியாயமும் செய்துவிட்டு ஓட்டுக்காக ஆர்த்தி அடித்த அந்தர் பல்டி! கொந்தளிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்த ஆர்த்தி, மெல்ல 'விக்டிம் பிளே' செய்து பிக்பாஸ் வீட்டில் நீடிக்க திட்டமிடுவதாக கொந்தளிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் சீசன் தொடங்கியது முதலே, தன்னை பெரிய நபர் போல சித்தரித்துக்கொண்டு, பேசி வருபவர் ஆர்த்தி. ஜூலியை ஃபேக்கான பெண் என இவர் கூறியதை முதலில் ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் கூட, அதையே ஒரு வேலையாக ஆர்த்தி வைத்திருப்பதை பார்த்து கடுப்பாகிவிட்டனர்.

ஜூலி வென்றுவிடுவாரோ என்ற பயத்தில்தான் ஆர்த்தி இப்படி வசைமாரி பொழிகிறார் எந்ற எண்ணத்திற்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். இதனால் ஜூலி மீது பரிதாபம் அதிகரித்துவிட்டது. ஆர்த்தி மீது கோபம் அதிகரித்துவிட்டது.

வாக்களிக்க போட்டி

வாக்களிக்க போட்டி

பிக்பாஸ் வீட்டிலிருந்து அடுத்து யாரை வெளியேற்றுவது என்பதில் ரசிகர்கள் பங்களிப்பு அதிகம் உள்ளது. கூகுள் சர்ச்சில் போய் பிக்பாசுக்கு வாக்களிக்க முடியும். கவர்ச்சி நாயகியான ஓவியா ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளார். ஓவியாவுக்கு ஓட்டு போடுங்க என்ற கோஷம் சமூக தளங்களில் எதிரொலிக்கிறது.

ஆர்த்தி மீது கோபம்

அதேபோல ஆர்த்தியை வெளியேற்றிவிட வேண்டும் என்ற கோபத்தில் உள்ளனர் ரசிகர்கள். நாள் ஒன்றுக்கு ஒருவர் 50 மதிப்புக்கு வாக்களிக்க முடியும். ஆர்த்தியை வெளியேற்ற ரசிகர்கள் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஆர்த்தியை தவிர பிறருக்கு வாக்களிக்கிறார்கள்.

பிரிச்சி போட்டு ஆர்த்திக்கு குறி

தங்கள் அபிமான ஓவியாவுக்கு 35 வாக்குகளையும், ஜூலி மற்றும் வையாபுரிக்கு தலா 5 மற்றும் 10 வாக்குகளையும் போட்டு 50 என்ற கோட்டாவை பூர்த்தி செய்துவிடுகிறார்கள் ரசிகர்கள். இதனால் வெளியேற்றப்பட உள்ள பட்டியலில் ஆர்த்திக்கு முதலிடம் கிடைத்துவருகிறது.

தகவல் போகுதே

தகவல் போகுதே

சமூக வலைத்தளங்களில் நடக்கும் இந்த கச்சேரிகுறித்த தகவல்கள் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும்
பரிமாறப்படுகிறது. எனவேதான் நேற்று திடீரென ஆர்த்தி கண்ணீர் விட்டு ரசிகர்களை ஈர்க்க நாடகத்தை அரங்கேற்றினார். தான் எப்போதுமே எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப்பவள் என்றும், எனவேதான் எல்லோரையும் கலாய்ப்பதாகவும் கூறி அனுதாபம் தேட முயன்றார்.

Bigg Boss Tamil, A Real Reality Rhow Or A Scripted Drama? - Filmibeat Tamil

போதும் ரீல் அந்து போச்சு

தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற பிக்பாஸ் வந்ததாக சென்டிமென்டாக பேசினார். ஜூலி அழுவதால் அவரை ஃபேக் என விமர்சனம் செய்த ஆர்த்தி நேற்று ஜூலி எடுத்த அதே அழுகை ஆயுதத்தை கையிலெடுத்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், ஆரம்பிச்சிட்டீங்களப்பா என கேலி செய்தனர். மேலும், தான் நல்லவள் என்றும், மற்ற அனைவரும் ஃபேக் எனவும் கூறி ஷாக் கொடுத்தார். இதன்மூலம் செய்த தப்புகளையெல்லாம் செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் அப்பாவி போல நடித்து வாக்கு கேட்கும் சில அரசியல்வாதிகளை நினைவுபடுத்தினார் ஆர்த்தி. ஒப்புக்கொள்கிறோம். அதிமுகவில் பெரிய அரசியல்வாதியாக உங்களுக்கு வாய்ப்புள்ளது ஆர்த்தி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Aarthi playing victim game and calls all the other Biggboss participants are fakes which is anger netizens.
Please Wait while comments are loading...