கன்னடர் என்பதால் ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்ப்பது இனவெறி: வி.சிறுத்தைகள் நிர்வாகி சீற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவதை யாரும் எதிர்க்க முடியாது என்று விடுதலை கட்சி நிர்வாகி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பேச்சை தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவார் என பரவலாக கருத்து உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து கருத்துக்கள் தெரிவித்த சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரஜினி தமிழர் இல்லை என்பதால் அவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதை ஏற்க முடியாது என கூறியிருந்தனர்.

Abusing Rajini's Kannada origin is nothing but racism, says Ravikumar

இந்நிலையில், தமிழர் என்ற பெயரில் எதிர்ப்பது இனவாதம் என வி.சி. கட்சியின் ரவிக்குமார் கருத்து கூறியுள்ளார். யாருக்குமே ரஜினி அரசியலுக்கு வருவதை தடுக்க உரிமையில்லை. கன்னடர் என்ற பெயரில் இதை செய்வது இனவாதம்.

ரஜினியை விமர்சனம் செய்ய நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால் கன்னட பூர்வீகம் என்பது அதில் ஒன்று கிடையாது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைக்கு எதிராக செயல்பட முடியாது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
No body has the right to oppose Rajini's entry in to politics. Abusing his Kannada origin is nothing but racism, says Viduthalai Siruthaigal Party leader Ravikumar.
Please Wait while comments are loading...