திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய வழக்கில் ஒருவர் கைது
திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய வழக்கில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெண் காவலர் மீது ஆசிட் வீசிய வழக்கில் பிரபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் டவுன் என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுரேஷ். இவரது மனைவி லாவண்யா திருப்பத்தூரில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். கடந்த 23 ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் லாவண்யா மீது ஆசிட் வீசினர்.

இதில், அவரது முகம், கழுத்து, கண், முதுகு பகுதிகள் சிதைந்தன. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் லாவண்யாவின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டனர். ஆசிட் வீச்சுக்கு உள்ளான லாவண்யா வலது கண் பார்வை இழந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் பெண் போலீஸ் லாவண்யா மீது ஆசிட் வீசியதாக பிரபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications