கேரள முதல்வரை சந்தித்த நான் ஏன், தமிழக முதல்வரை சந்திக்கவில்லை தெரியுமா? கமல் அடடே விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமல் அடடே விளக்கம் | Actor Kamalhassan's afraid about tamilnadu cm | Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வரை சந்திக்காமல் கேரள முதல்வரை சந்திக்க சென்றதற்கான காரணம் தான் சந்திப்பதற்குள் அந்த பதவிக்கு வேறு நபர் மாறிவிடுவாரோ என்ற பயம்தான் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று கமல் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்களும் பொங்கி எழுந்தனர்.

கடந்த சுதந்திர தினத்தன்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். மேலும் லஞ்சம் ஒழியும் வரை நாம் இன்னும் அடிமைகளே என்றும் தெரிவித்திருந்தார்.

 அரசியலில் தீவிரம்

அரசியலில் தீவிரம்

இதைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, அனிதா மரணம், ஆசிரியர்கள் போராட்டம், ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் என அனைத்திலும் தனது கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.

 மார்க்சிஸ்ட் கட்சியில்

மார்க்சிஸ்ட் கட்சியில்

இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய போகிறார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. இதற்கு நடிகர் கமல் மறுப்பு தெரிவித்தார்.

 கேரள முதல்வர் ஏன்?

கேரள முதல்வர் ஏன்?

தமிழ் நாளிதழ் ஒன்று நேற்று நடத்திய நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு கமல் அளித்த பதிலில், எனக்கும் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் நான் போவதற்குள் அவர் மாறிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான். கேரளத்தில் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. ஊழல் அற்ற தலைமை வேண்டும் என்றால் நாம் ஊழல் இல்லாமல் காசு வாங்காமல் வாக்களிக்க வேண்டும்.

 அரசியல் பிரகடனம் எப்போது?

அரசியல் பிரகடனம் எப்போது?

பிறந்த நாளில் அரசியல் அறிவிப்பெல்லாம் தேவையில்லை. அரசியல் கட்சியை ஒரு நல்ல நாளில் தொடங்கி விடுவேன் என்றார் அவர். இதற்காக ரஷ்ய புரட்சி நாள் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamalhassan says that he met Kerala CM because, if he is afraid that the TN CM will be changed before he go to meet him.
Please Wait while comments are loading...