அரசியலில் அடக்குமுறை என்பது எதார்த்தமாகிவிட்டது: கமல்ஹாசன் சரமாரி சாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் அடக்குமுறை என்பது எதார்த்தமாகிவிட்டது என நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். தனது ரசிகர்களிடையே நடிகர் கமல்ஹாசன் உரையாற்றினார்.

Actor Kamal haasan slams politicians

அப்போது அரசியலில் அடக்குமுறை என்பது எதார்த்தமாகிவிட்டது என அவர் குற்றம் சாட்டினார். தம்மை எத்தனை பேர் மிரட்டுகிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம் அல்ல என்ற அவர், என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம் என்றார்.

தான் பயப்பட வேண்டியது தனது இயக்கத்தில் உள்ள இயக்குநர்களுக்குதான் என்றும் எங்கோ உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு அல்ல என்றும் நடிகர் கமல் கூறினார்.

நான் அடி வாங்கிக்கொள்கிறேன் என்ற கமல், அடிக்கடி அடி வாங்க தான் ஒன்றும் மிருதங்கம் இல்லை என்றும் கூறினார். மேலும் தான் ஜெயிலுக்குப் போவதில் எந்த அவமானமும் இல்லை என்றார்.

தான் ஒன்றும் திருடிவிட்டு ஜெயிலுக்குப் போகவில்லை என்றும் நடிகர் கமல் கூறினார். தனது குடும்பத்தில் பல இந்துக்கள் இருப்பதாகவும் நடிகர் கமல் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal haasan slams politicians. He said suppression became casual in politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற