For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரறிவாளன் விடுதலைக்காக கோட்டையை நோக்கிய பேரணியில் பங்கேற்க நடிகர் விஜய் சேதுபதி அழைப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் விடுதலைக்காக கோட்டையை நோக்கிய பேரணியில் பங்கேற்க நடிகர் விஜய் சேதுபதி அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப் பட்டது. பின்னர், அவர்களின் கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

 Actor Vijay sethupathi says about perrarivalan

இதையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக வருகிற 11-ம் தேதி, வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி, கோரிக்கைப் பேரணியை நடத்த இருக்கிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.

இந்தப் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. தற்போது மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் எனப் பலரும் பேரணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

பேரறிவாளனின் விடுதலைக்காக நடத்தப்படும் பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, " பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை சிறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 'இன்று வரையில் தான் நிரபராதி' என பேரறிவாளன் சொல்லிக் கொண்டு வருகிறார். அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், 'பேரறிவாளன் நிரபராதி' என சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் என்று தெரியவில்லை.

25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

English summary
Actor Vijay sethupathi says about Rajiv Gandhi assassination case, perrarivalan release
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X