For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுசூதனனை வேட்பாளராக அறிவிக்க ஈபிஎஸ் அணி கடும் எதிர்ப்பு... விருப்பமனு பெற்று தேர்ந்தெடுக்க முடிவு!

ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆட்சி மன்றக் குழு சென்னையில் தொடங்கியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.கே.நகரில் உண்மையான போட்டி இவர்களிடையேதான்!- வீடியோ

    சென்னை : ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நிலை நீடிக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மதுசூதனனை வேட்பாளராக அறிவிப்ப விருப்பம் தெரிவிக்க இதற்கு முதல்வர் பழனிசாமி அணி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் விருப்பமனு பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக அந்தக் கட்சயின் ஆட்சி மன்றக் குழு நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியுள்ளனர்.

    இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தை தலைமை தாங்குகின்றனர். இதே போன்று அமைச்சர்கள் வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆரவார வரவேற்பு

    ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆரவார வரவேற்பு

    கட்சி அலுவலகம் வந்த போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்த போது தொண்டர்கள் ஆரவார கோஷமிட்டனர். ஆனால் முதல்வர் பழனிசாமி வந்த போது தொண்டர்கள் அமைதியாகவே இருந்தனர்.

    வேட்பாளர் தேர்வில் வேறுபாடு

    வேட்பாளர் தேர்வில் வேறுபாடு

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை உரையாற்றியதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். மீண்டும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை நிறுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறுகிறது, ஆனால் சில அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தெரிகிறது.

    அதிருப்தி

    அதிருப்தி

    இதனிடையே அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. வேட்பாளர் தேர்வில் சிலர் அதிருப்தி தெரிவிப்பதால் இன்றும் நாளையும் விருப்ப மனுக்களைப் பெற அதிமுக முடிவு செய்துள்ளது.

    நவம்பர் 29ல் வேட்பாளர்

    நவம்பர் 29ல் வேட்பாளர்

    விருப்ப மனுக்களை பெற்று அதன் அடிப்படையில் வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்று அதிமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே நாளை மறுதினம் அதாவது நவம்பர் 29ல் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பது தெரிய வரும் என்று கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தை பெற்றதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் அணி புறக்கணிக்கப்படுதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் மதுசூதனனை வேட்பாளராக அறிவிக்கவும் முதல்வர் அணி தடைபோடுவது ஓபிஎஸ் அணியை மேலும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

    English summary
    ADMK administrators and district secretaries holding a meeting to select the candidate for rk nagar by polls, high demands from OPS faction to again nominate Madhusudhanan as candidate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X