கர்நாடக சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் அதிமுக போட்டி.. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
சென்னை : கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சி மன்றக் குழுவின் முடிவின்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 12.5.2018 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் காந்திநகர் தொகுதியில் கர்நாடக மாநில கழகச் செயலாளர் யுவராஜ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹனூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணுகுமாரும், கோலார் தங்கவயல் தனித்தொகுதியில் கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் அன்பு போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
[Read more: ஆச்சரியம் இல்லை, வரலாறு.. கர்நாடக சட்டசபை தேர்தலில் 4 முறை வெற்றி பெற்ற அதிமுக! இப்போது சாதிக்குமா?]
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications