For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது..? கடுப்பான எடப்பாடி பழனிசாமி? என்ன காரணம்? பரபர பின்னணி..?

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி : திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை என்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது என ஆவேசமாகப் பேசினார்.

Recommended Video

    யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது..? கடுப்பான எடப்பாடி பழனிசாமி? என்ன காரணம்? பரபர பின்னணி..?

    கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை" என்றார்.

    நீட் தேர்வை விலக்கும் வரை திமுக ஓயாது! உதயநிதி ஸ்டாலின் மிகத் திட்டவட்டம்! மாணவர்கள் உற்சாகம்! நீட் தேர்வை விலக்கும் வரை திமுக ஓயாது! உதயநிதி ஸ்டாலின் மிகத் திட்டவட்டம்! மாணவர்கள் உற்சாகம்!

    அதிமுகவின் திட்டங்கள்

    அதிமுகவின் திட்டங்கள்

    மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழாவை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார் எனவும் திமுக ஆட்சிக்கு வந்தபின் மின்வெட்டு அதிகரித்துள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர் மின்வெட்டு

    தொடர் மின்வெட்டு

    மின்வெட்டு வரும் என நாங்கள் பலமுறை எச்சரித்தும் திமுக அரசு சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தற்பொழுது மின் வெட்டு காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை, தொழிற்சாலைகள் சரியாக செயல்படாததால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டினார். கடந்த பத்தாண்டு காலமாக வெளிநாடுகள் மூலமாக கொள்ளையடித்த பணத்தை கொண்டு வருவதற்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றார்.

    திமுக - மருத்துவக் கல்லூரி

    திமுக - மருத்துவக் கல்லூரி

    சட்டமன்றத்தில் இன்று மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் சொல்கிறார்.
    அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசிடம் பேசி 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். இன்னும் சொல்லப்போனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கி மருத்துவ கல்லூரி கொண்டு வந்ததே அதிமுக தான். திமுக தலைவர் கருணாநிதி உயிரோட இருக்கும்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்படவில்லை,ஆனால் கருணாநிதி கூறியதை போல் திமுக மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் சொல்கின்றனர்.

    விலைவாசி உயர்வு

    விலைவாசி உயர்வு

    யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது எனவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தொடர்ந்து பேசிய பழனிச்சாமி கூறுகையில் இன்று விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொடர்ந்து சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது. ஆனால் திமுகவினருக்கு தினந்தோறும் 1500 கோடி கமிஷன் போகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

    English summary
    AIADMK co co-ordinator Edappadi Palanisamy spoke angrily that the DMK had not made any plans for eleven months after coming to power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X