தினகரன் ஆதரவு ராஜ்யசபா எம்பிக்களை தகுதி நீக்கம் செய்யுங்க - மைத்ரேயன் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்பிக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி ராஜ்யசபா செயலாளர் தீபக் வர்மாவிடம் மைத்ரேயன் மனு அளித்தார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர் டிடிவி தினகரன் தனியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

AIADMK’s OPS camp petitions for 3 MPs disqualifies

அதேபோல தினகரனுக்கு ஆதரவாக மூன்று ராஜ்யசபா எம்பிக்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன் மனு அளித்துள்ளார்.

விஜிலா சத்யானந்த் , நவநீத கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜ்யசபா செயலாளர் தீபக் வர்மாவிடம் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நவநீதகிருஷ்ணன் எம்.பி, தன் மீது யாரும், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் தான் எந்த அணியையும் சாராதவன், அதிமுகவின் நடுநிலை உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன் என்றுதான் தேர்தல் ஆணையத்தில் பேசினேன் என்று குறிப்பிட்டார். எனவே என் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajya Sabha member V Maithreyan,has given petition to Rajyasabha secretary Deepak varma, disqualify to TTV Dinakaran loyalists MPs including Navaneetha Krishnan.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற