புது 500 ரூபாய் நோட்டுக்களைப் பொருத்தி, ஏடிஎம் ரெடியாக இன்னும் ஒரு வாரம் ஆகுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 ரூபாய் நோட்டைவிட புதிய 500 ரூபாய் நோட்டு சிறியது என்பதால், அவற்றை ஏடிஎம் இயந்திரங்களில் வைக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனை சரி செய்யும் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என்றும் அதன் பிறகு பணத்தட்டுப்பாடு நீங்கும் என்றும் வங்கித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து புதியதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது. இதில் 2000 ரூபாய் நோட்டை ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்கான வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டது. இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டை மக்கள் எடுத்து வருகின்றனர்.

All ATMs will work from next week say bank officers

ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையத்தில் இருந்து மக்களால் எடுக்க முடியவில்லை. இதற்கு காரணம் 500 ரூபாய் நோட்டு ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்த முடியவில்லை. 500 ரூபாய் நோட்டை பொருத்தும் வகையில் ஏடிஎம் இயந்திரம் புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என்றும் அதன் பின்னர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில வியாபாரிகள் சிறு சிறு தொழில் நிறுவனங்கள் வருமானத்தை நஷ்ட கணக்கு காட்டி கமிஷனுக்கு பணம் மாற்றும் வேலையில் புரோக்கர்களுடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். அப்படி பணப்பரிமாற்றம் செய்யும் புரோக்கர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
All ATMs will work completely from next week, said bank officers.
Please Wait while comments are loading...