உபி முதல்வராக யோகி தேர்வு.... ஜனநாயக சக்திகளுக்கு விடப்படுள்ள பகிரங்க சவால்: ஆளூர் ஷாநவாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக சர்ச்சை சாமியார் யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது ஜனநாயக சக்திகளுக்கு விடப்பட்டுள்ள பகிரங்க சவால் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டவுடன், அவரது கடந்த கால வெறுப்புப் பேச்சுக்களை குறிப்பிட்டு, பலரும் தமது அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Aloor Shanavas slams Yogi

அத்வானியோ வாஜ்பேயியோ அமித்ஷாவோ மோடியோ யோகியோ ஆட்கள் மாறினாலும் அஜெண்டா மாறுவதில்லை எனும் அடிப்படையை அனைவரும் உணர வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எண்ணத்துக்கு வடிவம் கொடுக்கும் பாத்திரங்கள்தான் இவர்கள்.

நாளை இவர்களின்றி வேறு புதிய நபர்கள் வருவார்கள். ஆனாலும், 90 ஆண்டுகளுக்கு முன் நாக்பூரில் எழுதப்பட்ட அந்தப் பழைய சித்தாந்தம் தான் ஆளும். இதை முறியடிப்பது எளிதன்று.

மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகளிடம் கூர்மையான உத்தியும் நேர்மையான உழைப்பும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். "உ.பி.யில் ஒரு முசாபர் நகரைக் கண்டீர்கள்; உ.பி.யே இனி முசாபர் நகர் ஆவதைக் காணுங்கள்" என்பதுதான் யோகியை தேர்வு செய்ததன் மூலம் பா.ஜ.க சொல்லியிருக்கும் செய்தி. இது, ஜனநாயக சக்திகளுக்கு விடப்படுள்ள பகிரங்க சவாலும் கூட!

இவ்வாறு ஆளூர் ஷாநவாஸ் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VCK Deputy General Secretary Aloor Shanavas slammed that Yogi Adityanath elected as UP CM.
Please Wait while comments are loading...