கன்னியாகுமரி கடலில் பரபரப்பை ஏற்படுத்திய கப்பல்.. பின்னணி தகவல்கள் வெளியாகின!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல்பகுதியில் கடந்த 5 நாட்களாக நின்ற கப்பல் மும்பையைச் சேர்ந்தது என்றும் எங்கு செல்வது என்று தகவல் வராதததால் குமரிக் கடலில் நின்றது தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நின்றது மும்பை கப்பல் என்பது தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதி அருகே கடந்த 5 நாட்களாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கப்பல் ஒன்று நின்றது. கடலில் இருந்து 15 நாடிகல் மைல் தூரத்தில் நிற்கும் இந்தப் கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது தெரியாமல் இருந்தது. கடற்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கும் இந்தக் கப்பலில் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர்.

 An unidentified ship near Kanyakumari seashore, investigations on

முதற்கட்ட விசாரணையில் இது மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் கப்பல் என்று தெரிய வந்தது. மேலும் தூத்துக்குடிக்கு செல்வதா அல்லது சென்னைக்கு செல்வதா என்று தகவல் அளிக்கப்படாததால் குமரிக் கடலில் கப்பல் நின்றது தெரிய வந்தது. உரிமையாளர்களிடம் இருந்து் உத்தரவு வந்ததையடுத்து கப்பல் கிளம்பியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An unidentified ship near Kanyakumari seashore, investigations on about what is inside the ship and where it is from
Please Wait while comments are loading...