பொங்கல் விடுமுறை எதிரொலி.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மீண்டும் மாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜன.12ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஜன.18ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. 18-க்கு தள்ளி வைக்கப்பட்ட தேர்வு தற்போது ஜனவரி 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க தற்போதே பொங்கல் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

Anna university postponed exam due to Pongal leave

இந்த நிலையில் பொங்கலுக்காக தமிழகத்தின் அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜன.12ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஜன.18ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.

தற்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 18-க்கு தள்ளி வைக்கப்பட்ட தேர்வு தற்போது ஜனவரி 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu government announce Pongal holiday for schools and college. So Anna university postponed exam due to Pongal leave. Jan 12 exams will be held on Jan 18. Now exam again postponed from Jan 18 to Jan 23.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற