திருட்டு விசிடி பற்றி தகவல் தந்தால் ரூ.1 லட்சம் பரிசு.. விஷால் அதிரடி அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருட்டு விசிடி விற்பனை குறித்து தகவல் தருவோருக்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு தருவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

Anti pirates: Vishal announced 1 lakh cash prize

வெகுகாலமாக திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர், நடிகர் விஷால். இந்நிலையில், சென்னையில் இன்று நடந்த 'விளையாட்டு ஆரம்பம்' பட விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.

விழாவில் விஷால் பேசியதாவது: தியேட்டரில்தான் கேமரா வைத்து படத்தை காப்பி செய்து, திருட்டு வி.சி.டி தயாரிக்கப்படுகிறது. அப்படி திருட்டு விசிடி தயாரிக்கும் நபர்களை தியேட்டர் நிர்வாகத்திடம் பிடித்துக் கொடுத்து எப்.ஐ.ஆர் பதிவு செய்தால், சம்பந்தப்பட்டவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vishal announced 1 lakh cash prize for the people who will expose about pirated vcd business.
Please Wait while comments are loading...