For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி செலவுக்கு பெர்சனல் லோன் வாங்கப் போறீங்களா? இதைப் படிச்சிட்டு போங்க!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது... ஆடைகள், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க தயாராகி விட்டனர் நடுத்தர வர்க்கத்தினர். இன்றைக்கு போனஸ் என்பது பழங்கதையாகிவிட்டது. ஆனாலும் புத்தாடைகள், பட்டாசுகள், வீட்டிற்குத் தேவையான பொருட்களை கடன் வாங்கியாவது வாங்க வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

இன்றைக்கு மாதச்சம்பளம் வாங்கும் நம்மில் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த வார்த்தை பெர்சனல் லோன். ஆனால், இதைப் பற்றித் தெரியாதவர்களுக்கு? ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் ரகம்தான். அதே சமயம், அதீத ஆர்வக்கோளாரால், பெர்சனல் லோன் வாங்கி கட்ட முடியாமல் முழி பிதுங்கிப் போனவர்களுக்கு அது ஒரு இனிமா. ஏன் என்றால், பெர்சனல் லோன் வாங்கிவிட்டு மாதத் தவணை கட்டவேண்டிய நாள் நெருங்க நெருங்க நம் மனதுக்குள் ஏற்படும் ஒரு அவஸ்தை இருக்கிறதே,... யப்பா மரண அவஸ்தை.

பெர்சனல் லோன்

பெர்சனல் லோன்

பெர்சனல் லோன் வாங்கிய ஜோரில், ஒரு மூன்று மாதமோ அல்லது ஆறு மாதமோ ஒழுங்காக கட்டிவிடுவோம். ஆனால், அதன்பிறகுதான், நம் மூளையில் பல்பு எரிய ஆரம்பிக்கும், ச்ச்சே, நாம் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமோ என்று. அப்புறம், அந்த லோனை அடைக்க, இன்னொரு லோன், இதை அடைக்க கிரெடிட் கார்டு லோன் என்று நாம் வாங்கிக்கொண்டே போவோம். ஆகவே, பெர்சனல் லோன் வாங்குவதற்கு முன் ஒரு முறைக்கு நான்கு முறை நன்றாக யோசிக்கவேண்டும் என்பது அனுபவசாலிகளின் கருத்தாக உள்ளது.

தீர்மானியுங்கள்

தீர்மானியுங்கள்

பெர்சனல் லோன் வாங்கும் முன்பாக செய்ய வேண்டியவை என்ன? என்பது பற்றி பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரும், மேலாளருமான சுப்ரமணியன் கூறுவதை படியுங்களேன்: நம்முடைய மாதச் சம்பளம் எவ்வளவு, அதில் வீட்டு வாடகை, நம்முடைய குடும்பத்திற்கு ஆகும் மளிகைச் செலவு, மொபைல், டெலிஃபோன் பில் கரண்ட் பில் எவ்வளவு, மருத்துவச் செலவு எவ்வளவு, போக்குவரத்து செலவு, மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் திடீர் செலவுகள் எவ்வளவு என்பதையும் உத்தேசமாக தெரிந்துகொள்ளவேண்டும். இவையெல்லாம் போக, மீதமுள்ள வருமானத்தில்தான், நாம் இந்த லோன் வாங்கினால், மாதா மாதம் ஒழுங்காக கட்ட முடியுமா? என்பதையும் தீர்மானிக்க வேண்டும்

லோன் அவசியமா?

லோன் அவசியமா?

லோன் இப்போது ஏன் வாங்கவேண்டும், அதனுடைய அவசியம் என்ன? அதை இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு வாங்கினால் என்ன என்ன நன்மைகள் உண்டாகும் என்று நம்மை நாமே கேள்விகள் கேட்டு தெளிவுபெற்ற பின்னரே பெர்சனல் லோன் வாங்க முயற்சி செய்யவேண்டும். அப்படியே லோன் வாங்கினாலும் மாதா மாதம் தவணை தேதி தவறாமல் கட்ட முடியுமா? என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் பிரச்னைதான்.

ஆலோசனை அவசியம்

ஆலோசனை அவசியம்

கூடவே, நம்முடைய நலம் விரும்பிகளின் ஆலோசனையையோ அல்லது நம்முடைய நிதி ஆலோசகரிடமோ யோசனை கேட்டு அதன்படி நாம் முடிவு எடுக்கவேண்டும். ஆனால், நாம் ஏற்கனவே பெர்சனல் லோன் வாங்குவதென்று முடிவு செய்துவிட்டு அதன் பிறகு, நாம் அவர்களின் ஆலோசனை கேட்டால், அது நமக்குள் வேண்டாத மனவருத்தத்தை உண்டாக்கும்.

மாதத்தவணை

மாதத்தவணை

பெர்சனல் லோன் வாங்கி தவணை கட்ட முடியாமல் அவஸ்தைப் பட்டுகொண்டிருக்கும் திருவாளர் பொதுஜனம் ஒருவரின் அனுபவம் இது. சார், "நான் கிட்டத்தட்ட 14 வருடங்களாக பெர்சனல் லோன் வாங்கி மாதம் தவறாமல் மாதத்தவணை கட்டிவருகிறேன். ஆனாலும் மனதில் பயம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஏன் என்றால், தவணை கட்டவேண்டிய நாளில் நம்முடைய வங்கிக்கணக்கில் ஈ.எம்.ஐ.க்கு தேவையான பணம் இல்லாமல் போனால் ஈ.எம்.ஐ திரும்ப சென்றுவிடும். அதனால், நாம் தேவையில்லாமல் வங்கிக் கட்டணம் தரவேண்டும். கூடவே நாம் லோன் வாங்கிய நிறுவனத்துக்கும் அபராதம் கட்டவேண்டும். ஆகவே நான் எப்பவும் என்னுடைய வங்கிக்கணக்கில் ஈ.எம்.ஐ.க்கு வேண்டிய பணம் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கழுத்துக்கு மேல் கத்தி

கழுத்துக்கு மேல் கத்தி

எனவே, பெர்சனல் தீபாவளி செலவிற்காக பெர்சனல் லோன் வாங்க நினைக்கும் நபர்கள் இதை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பெர்சனல் லோன் வாங்குவானேன்... அப்புறம் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல நினைத்து கதி கலங்குவானேன் என்பதே அனுபவசாலிகளின் கருத்தாக உள்ளது.

English summary
If you are going to get a loan for Diwali expenses check this first.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X