விதம் விதமான எக்ஸர்ஸைஸ்.. கின்னஸில் இடம்பெற துடிக்கும் சிவகங்கை ராணுவ வீரர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தனது சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக வித்தியாசமான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் ராணுவ வீரர் ஒருவர்.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சாதிக்கத் துடிக்கின்றனர். ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தி லிம்கா புத்தகத்திலோ அல்லது கின்னஸ் புத்தகத்திலோ இடம்பெற வேண்டும் என்பதே அவர்களின் லட்சியமாக உள்ளது.

அதன்படி ஏதேனும் புது முயற்சிகளை புகுத்தி வருகின்றனர். பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு இளைஞர்கள் விரும்புகின்றனர்.

பல்லால் தேங்காய் உறித்தல்

பல்லால் தேங்காய் உறித்தல்

பற்களால் தேங்காய் உறித்தல், டியூப் லைட் சாப்பிடுதல், பல்ப் சாப்பிடுதல் உள்ளிட்ட சாதனை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இவற்றால் உயிருக்கு ஆபத்து என்றாலும் சாதிக்கும் என்ற வெறியால் சாதனை நிகழ்த்துகின்றனர். பல்டி அடித்தபடி படி ஏறியெல்லாம் சாதனை செய்கின்றனர்.

ராணுவ அதிகாரியின் சாதனை

ராணுவ அதிகாரியின் சாதனை

அந்த வகையில் சிவகங்கையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் சாதனை படைக்கும் நோக்கில் பல்வேறு வித்தியாசமான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். திருப்புவனத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (29), அசாம் மாநிலத்தில் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். சிறுவயதிலேயே சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் யாருடைய துணையும் இன்றி பல்வேறு உடற்பயிற்சிகளை அதுவும் வித்தியாசமானவற்றை செய்து வருகிறார்.

விடுமுறை நாள்களில்...

விடுமுறை நாள்களில்...

இதே உத்வேகத்துடன் பல்வேறு பயிற்சிகளை செய்து வரும் இவர், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உடற்பயிற்சி செய்யச் சொல்லித் தருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ராணுவத்திலிருந்து விடுமுறை நாள்களில் சொந்த ஊருக்கு வரும் இவர் ஊர்மக்கள் முன்பும் வித்தியாசமான உடற்பயிற்சிகளை செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

பின்னோக்கி ஓடுவது...

பின்னோக்கி ஓடுவது...

முட்டிகளை மடக்கியபடி அசாதாரணமாக உடற்பயிற்சி செய்வது, பின்னோகி சாலையில் ஓடுவது உள்ளிட்டவற்றை அவர் செய்துவருகிறார். இதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே அவரது லட்சியமாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Army personnel from Sivagangai is trying to be featured his name in guinness book An Army personnel who works in Assam, reaches his native town in holidays is performing unsual exercises to be featured his name in Guiness Record book.
Please Wait while comments are loading...