For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடையை மீறுவதாக மே 17 இயக்கம் அறிவிப்பு- மெரினாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

போலீஸாரின் கெடுபிடியால் விடுமுறை நாளையொட்டி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: போலீஸாரின் கெடுபிடியால் விடுமுறை நாளையொட்டி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி சிலை வரை உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக காற்று வாங்க வந்தவர்கள் திரும்பிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. போலீஸ் அனுமதியை மீறி மே 17 இயக்கம் நினைவேந்தல் கூட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Around 500 police has been deployed in Chennai Marina beach

அனுமதியின்றி மெரினாவில் கூடினால் கைது செய்வோம் என காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் மே 17 இயக்கத்தின் அழைப்பால் மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி சிலை வரை உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பலர் நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பலர் கடற்கரைக்கு செல்ல முடியாமல் திரும்பிச்சென்றனர்.

மெரினாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் எற்பட்டுள்ளது. திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

English summary
arround 500 police has been deployed in Chennai Marina beach. Due to this public affected heavily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X