For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி கார் விபத்தும் ஜாமீனுக்காக ஐஸ்வர்யா கடந்து வந்த பாதையும்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக ஐடி ஊழியர் ஐஸ்வர்யா மீது கிண்டி போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இரண்டு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஐஸ்வர்யா தரப்பில் ‌தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.சொக்கலிங்கம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.

40 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யாவிற்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த ஜாமீனுக்காக இவர் கடந்த 40 தினங்களாக நடத்திய போராட்டங்களைப் பற்றியும் வழக்கு கடந்து வந்த பாதையையும் தெரிந்து கொள்வோம்.

Audi Aishwarya hit and run case update
  • கடந்த ஜூலை 1ம் தேதி அதிகாலை நான்கரை மணியளவில் திருவான்மியூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முனுசாமி, தனது நண்பர் சரவணனுடன் கூலி வேலைக்கு சென்றார். தரமணி அருகே ராஜீவ் காந்தி சாலையை முனுசாமி கடக்க முயன்றபோது வேகமாக வந்த ஆடி கார் முனுசாமி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
  • அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தார் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த வர்த்தக ஆலோசர் வில்சனின் மகள் ஐஸ்வர்யா என்பது தெரியவந்தது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிகிறார்.
  • 'வீக் எண்ட் பார்ட்டி' என்ற பெயரில் நண்பர்களோடு குடித்து விட்டு தரமணி வழியாக அதிக வேகத்தில் காரை ஓட்டி வந்து முனுசாமி என்ற தொழிலாளி மீது காரை மோதியிருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே முனுசாமி பலியாகிவிட்டார்.
  • கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டார் ஐஸ்வர்யா. அதையடுத்து ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
  • முனுசாமியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறது திருவான்மியூர் டி.டி.கே காலனி. அந்தக் குடும்பமே முனுசாமியின் வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறது. அவருடைய மனைவி கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். முனுசாமியின் மூத்த மகன் கார்த்திக் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் திவ்யா 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது.
  • ஐஸ்வர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார். ஆனால் நேரடியாக இங்கு வரக் கூடாது என்று மனு தள்ளுபடியானது. இதையடுத்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டை அணுகினார். அங்கு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
  • இதையடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினார் ஐஸ்வர்யா. 2முறை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஸ்டேட் பர்ஸ்ட் என்றெல்லாம் மனுவில் கூறினார்
  • 3வது முறையாக ஐஸ்வர்யா தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது.
  • அரசுத் தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், ஐஸ்வர்யா மது அருந்தி தனது விலை உயர்ந்த காரை ஓட்டியதற்கும், ஒரு ஹோட்டலுக்கு சென்று தனது ஏடிஎம் கார்டு மூலமாக மது பானங்கள் வாங்கியதற்கும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
  • ஐஸ்வர்யாவின் மூன்றாவது மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி ஜி. சொக்கலிங்கம், தீர்ப்பை இன்று அளிப்பதாக கூறி ஒத்திவைத்தார்.
  • இன்று நீதிபதி ஜி.சொக்கலிங்கம் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். 40 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் தற்போது ஐஸ்வர்யாவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
English summary
Audi Aishwarya hit and run cae is taking a curious turn. Sources say that Aishwarya’s counsel is looking forward to make it turn out that she had consumed alcohol within permissible limits. The blood test sample has been sent to the lab for a final report. It is here that the twist can take place, say sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X