நான் மறுத்தும் என்னை காதலிக்க வைத்தார் அஸ்வினி: அழகேசன் பரபரப்பு வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நான் காதலிக்க மறுத்தேன் - அழகேசன் பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ

  சென்னை: நான் உனக்கு ஏற்றவன் இல்லை என்று கூறியும் என்னை கட்டாயப்படுத்தி காதலிக்க வைத்தவர் அஸ்வினிதான் என்று அழகேசன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

  சென்னை கே கே நகரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த அஸ்வினியை கல்லூரி விட்டு வீடு திரும்பும் போது அழகேசன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

  இதில் நிலைத்தடுமாறிய அஸ்வினி உயிரிழந்தார். அழகேசனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

  முதலில் கேட்ட கேள்வி

  முதலில் கேட்ட கேள்வி

  பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அழகேசனை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது போலீஸாரிடம் அஸ்வினி செத்துட்டாளா இல்லை உயிரோடு இருக்கிறாளா என முதலில் கேட்டுள்ளார் அழகேசன். அவர் இறந்துவிட்டார் என்று போலீஸ் கூறியதும் தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

  குடும்பம் பெரிய குடும்பம்

  குடும்பம் பெரிய குடும்பம்

  அப்போது அழகேசன் தனது வாக்குமூலத்தை போலீஸிடம் அளித்தார். அவர் கூறுகையில், எனது குடும்பம் பெரிய குடும்பம். எனக்கு 3 மூத்த சகோதரர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர். நான் தண்ணீர் போடும் பிசினஸ்ஸை செய்துவந்தேன். அப்போது அஸ்வினிதான் முதலில் என்னிடம் வந்து காதலைச் சொன்னார்.

  பொருத்தமானவன் இல்லை என்றேன்

  பொருத்தமானவன் இல்லை என்றேன்

  அப்போது உன் அழகுக்கு நான் ஈடாக மாட்டேன். நான் உனக்கு பொருத்தமானவனும் அல்ல என்று சொன்னேன். அதற்கு அஸ்வினி நான் உங்களை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடிவு செய்துள்ளேன். எந்த சூழ்நிலை வந்தாலும் நான் உங்களை விட்டு பிரியமாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

  அஸ்வினியின் மனதை கெடுத்தது தாய்தான்

  அஸ்வினியின் மனதை கெடுத்தது தாய்தான்

  அஸ்வினிக்காக நான் எனது மனதில் கோவில் கட்டி வாழ்ந்து வந்தேன். அவர் இல்லாமல் நான் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். எங்கள் காதல் விவகாரம் அவரது தாய்க்கு தெரிய வரவே அவர் எதிர்த்தார். என் மீது போலீஸில் புகார் கொடுத்து அசிங்கப்படுத்தினார்.

  மண்ணெண்ணெய்

  மண்ணெண்ணெய்

  அஸ்வினியை கொலை செய்வதற்கு முழு பொறுப்பு அவரது தாய்தான். அஸ்வினியை கத்தியால் குத்தியும் அவர் சாகவில்லை என்றால் அவரை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு தானும் செத்துவிடலாம் என்று இருந்தேன். அஸ்வினி இறந்தவுடன் நான் என் மீது கெரோசின் ஊற்றிக் கொண்டு லைட்டரை எடுத்து பற்ற வைத்தபோதுதான் அது கீழே விழுந்தது. அப்போது பொதுமக்களிடம் சிக்கி கொண்டேன் என்று தனது வாக்குமூலத்தில் அழகேசன் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Azhagesan in his police statement says that she first made love proposal to him and though he denies, she compuls him to love her.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற