For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுர குலுங்க... குலுங்க... 63 கிலோ கேக் வெட்டி அசத்திய அழகிரி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தம்.

அதே போல அக்டோபர் மாதம் நடைபெறும் தேவர் ஜெயந்தியும் தமிழ்நாடு முழுவதிலும் குறிப்பாக மதுரையில் பிரமாதமாக கொண்டாடப்படும்.

திமுக ஆட்சி காலத்தில் அழகிரி பிறந்தநாளுக்கு மதுரையே அதகளப்படும். அதே அதிமுக ஆட்சி என்றால் காட்சியே மாறி அமைதியாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு அழகிரி பிறந்தநாளுக்கு பிளெக்ஸ் பேனர்கள் வைப்பதற்கும், போஸ்டர்கள் ஒட்டவும் ஜனவரி 1ம் தேதி மாநகராட்சியும், காவல்துறையும் தடை விதித்து இருந்தது. ஆனால் ஒட்டப்பட்ட, ஒட்டப்படாத போஸ்டர்களினால் உருவான சர்ச்சை. கட்சியில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எந்த தடங்களும் இல்லை அழகிரிக்கு.

திரளான வரவேற்பு

திரளான வரவேற்பு

அழகிரியின் வீட்டில் இருந்து விழா நடைபெற்ற ராஜா முத்தையா மன்றம்வரை மு.க.அழகிரி சென்ற வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சுமார் 2 மணி நேரம் தொண்டர்கள் வரவேற்பை பெற்ற பின்னரே, அவர் விழா மண்டபத்திற்கு செல்ல முடிந்தது.

வாழ்த்து சொன்ன கருணாநிதி

வாழ்த்து சொன்ன கருணாநிதி

பிறந்தநாள் விழா ஊர்வலத்தில் கருணாநிதி வேடம் அணிந்த ஒருவர், தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படி வந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

கேக் ஊட்டிய கருணாநிதி

கேக் ஊட்டிய கருணாநிதி

தந்தையுடன் பிணக்கு என்றாலும், கடந்த பிறந்தநாளின் போது அப்பா கருணாநிதியின் கையால் கேக் ஊட்டி விட்ட காட்சியை போட்டோவாக எடுத்து பெரிய பேனராக வைத்திருந்தனர்.

அஞ்சா நெஞ்சர் அழகிரி

அஞ்சா நெஞ்சர் அழகிரி

வரவேற்புக்குபின் விழா மேடைக்கு வந்த மு.க.அழகிரி எம்.பி., தொண்டர்களை பார்த்து கையசைத்து வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். அப்போது தொண்டர்கள், ‘‘அஞ்சாநெஞ்சர் அழகிரி வாழ்க'' என கோஷங்கள் எழுப்பினர்.

630 கிலோ கேக்

630 கிலோ கேக்

தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த 630 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கினை மு.க.அழகிரி எம்.பி. வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். அந்த கேக்கில், ‘‘மலர் பாதையா... முள் படுக்கையா... எதுவாகிலும் அண்ணன் வழியில்...'' என எழுதப்பட்டு இருந்தது.

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு தையல்மிஷின், மூன்று சக்கர வாகனங்கள் என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அழகிரி வழங்கினார்.

பரிசும்… பட்டாடையும்

பரிசும்… பட்டாடையும்

ராஜா முத்தையா மன்றத்தில் பகுதி வாரியாக தி.மு.க.வினர் வந்து பரிசு பொருட்களை வழங்கி மு.க.அழகிரி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் எம்.பி. ராஜா முத்தையா மன்றம் வந்து மு.க.அழகிரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பால்குடம், முளைப்பாரி

பால்குடம், முளைப்பாரி

பெண்கள் பால் குடம் எடுத்தும், முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். அழகிரியின் ஆள் உயர கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.

அலகு குத்திய தொண்டர்

அலகு குத்திய தொண்டர்

முருகன் கோவில், மாரியம்மன் கோவில்களில்தான் நேர்த்திக்கடனுக்காக அலகு குத்துவார்கள். ஆனால் அழகிரி பிறந்தநாளில் திமுக தொண்டர் ஒருவர் அலகு குத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

தெய்வமான அழகிரி

தெய்வமான அழகிரி

தி.மு.க. தொண்டர் அணி அமைப்பாளர் சோலை ரவி சார்பில் அழகிரியை காவல் தெய்வமாக சித்தரித்து பிரம்மாண்ட வெண்கல அரிவாள்களை கொண்டு வந்து மு.க.அழகிரியிடம் வழங்கப்பட்டது.

ஏலக்காய் மாலை

ஏலக்காய் மாலை

முன்னாள் மேற்கு மண்டல தலைவர் ஆர்.எம்.பி.சின்னான் 63 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை கொண்டு வந்து மு.க.அழகிரிக்கு அணிவித்தார்.

அதிரவைத்த பட்டாசுசிங்கத்தில் கதாயுதம் ஏந்திய அழகிரி உருவத்தை வைத்து கொண்டு வந்தனர். தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழங்கப்பட்டன. இந்த வரவேற்பினால் மதுரை நகரையே மு.க.அழகிரி ஆதரவாளர்கள் அதிர வைத்தனர்.

அதிரவைத்த பட்டாசுசிங்கத்தில் கதாயுதம் ஏந்திய அழகிரி உருவத்தை வைத்து கொண்டு வந்தனர். தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழங்கப்பட்டன. இந்த வரவேற்பினால் மதுரை நகரையே மு.க.அழகிரி ஆதரவாளர்கள் அதிர வைத்தனர்.

சிங்கத்தில் கதாயுதம் ஏந்திய அழகிரி உருவத்தை வைத்து கொண்டு வந்தனர். தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழங்கப்பட்டன. இந்த வரவேற்பினால் மதுரை நகரையே மு.க.அழகிரி ஆதரவாளர்கள் அதிர வைத்தனர்.

10000 தொண்டர்கள்

10000 தொண்டர்கள்

சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியின் பிறந்தநாளில் கட்சியின் உத்தரவையும் மீறி தென்மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.வினர் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். இதன் காரணமாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ராஜா முத்தையா மன்றம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மாற்றுப்பாதையில் போக்குவரத்து இயக்கப்பட்டது.

திராணியை நிரூபித்த அழகிரி

திராணியை நிரூபித்த அழகிரி

மதுரை மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் தனக்கு இருக்கும் ஆதரவை மீண்டும் ஒருமுறை மதுரை குலுங்க குலுங்க பிறந்தநாள் கொண்டாடி நிரூபித்துள்ளார் அழகிரி.

English summary
M K Azhagiri had cut 630 kg cake on his birth day today in Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X