மெட்ரோ, மோனோ வரிசையில்.. சென்னைக்கு வருகிறது பேட்டரி பஸ்கள்: விஜயபாஸ்கர் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்றைய கூட்டத்தொடரின் போது போக்குவரத்துத்துறை அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Battery bus will be used in Chennai soon: MR Vijayabaskar

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் பேட்டரி பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்கான சோதனை ஓட்டங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மெட்ரோ ரயில் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. மோனோ ரயில்களும் சென்னையில் அறிமுகம் செய்யப்படும் என்று அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் பேட்டரி பஸ்கள் குறித்த அறிவிப்பை விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Transport Minister MR Vijayabaskar said Battery bus will be used in Chennai soon. He also said that to reduce the air poliution they have decided to use Battery bus.
Please Wait while comments are loading...